ரூ.90,000 கோடி மதிப்பில் புதிதாக 6 நீர்மூழ்கிகள்: இந்தியா, ஜெர்மனி இடையே விரைவில் ஒப்பந்தம்

Priya
48 Views
2 Min Read

இந்​திய கடற்​படைக்​காக ரூ.90,000 கோடி​யில் புதிதாக 6 நீர்​மூழ்​கி​களை தயாரிக்க இந்​தி​யா, ஜெர்​மனி இடையே விரை​வில் ஒப்​பந்​தம் கையெழுத்​தாக உள்​ளது.

இந்​திய கடற்​படை​யில் சுமார் 150 போர்க்​கப்​பல்​கள் உள்​ளன. இதில் ஐஎன்​எஸ் விக்​ர​மா​தித்​யா, ஐஎன்​எஸ் விக்​ராந்த் ஆகியவை விமானந்​தாங்கி போர்க்​கப்​பல்​கள் ஆகும். ஐஎன்​எஸ் விஷால் என்ற பெயரில் 3-வது விமானந்​தாங்கி போர்க்​கப்​பல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

வரும் 2030ம் ஆண்​டுக்​குள் இந்த கப்​பல் இந்​திய கடற்​படை​யில் இணைக்​கப்​படும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. அடுத்​தடுத்த ஆண்​டுக்​குள் பல்​வேறு போர்க்​ கப்​பல்​கள் கடற்​படை​யில் இணைக்​கப்பட உள்​ளன. இதன்​படி வரும் 2035-ம் ஆண்​டுக்​குள் இந்​திய போர்க்​கப்​பல்​களின் எண்​ணிக்​கையை 200-க்​கும் அதிகமாக உயர்த்த திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது.

தற்​போது இந்​திய கடற்​படை​யில் 20 நீர்​மூழ்​கி​கள் உள்​ளன. இதில் 17 நீர்​மூழ்​கி​கள் டீசல்​- எலெக்ட்​ரிக் வகையை சேர்ந்​தவை ஆகும். மேலும் அணு சக்​தி​யில் இயங்​கும் 3 நீர்​மூழ்​கி​களும் உள்​ளன. டீசல்​- எலெக்ட்​ரிக் வகையை சேர்ந்த இந்​திய நீர்​மூழ்​கி​கள் 2 முதல் 5 நாட்​கள் வரை கடலுக்கு அடி​யில் பயணம் செய்​யும். அணு சக்​தி​யில் இயங்​கும் 3 இந்​திய நீர்​மூழ்​கி​கள் தொடர்ந்து 3 மாதங்கள் வரை கடலுக்கு அடி​யில் மூழ்​கி​யிருக்​கும் திறனை பெற்று உள்​ளன. இந்​திய கடற்​படை​யில் தற்​போது ஏஐபி தொழில்நுட்ப அடிப்​படையி​லான நீர்​மூழ்​கி​கள் இல்​லை.

இந்த குறையைப் போக்க இந்​திய கடற்​படை​யின் 6 கல்​வாரி நீர்மூழ்​கி​கள் ஏஐபி தொழில்​ நுட்​பத்​துடன் மேம்​படுத்​தப்​பட்டு வருகின்​றன. அடுத்த கட்​ட​மாக ஜெர்​மனி​யுடன் இணைந்து புதிதாக ரூ.90,000 கோடி​யில் 6 ஏஐபி நீர்​மூழ்​கி​களை தயாரிக்க திட்​ட​மிடப்​பட்டு உள்​ளது. இதுதொடர்​பாக இந்​தி​யா, ஜெர்​மனி இடையே பல ஆண்​டு​களாக பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வருகிறது. தற்​போது பேச்​சு​வார்த்தை இறு​திக் கட்​டத்தை எட்டி வரும் செப்​டம்​பரில் இரு நாடு​கள் இடையே ஒப்​பந்​தம் கையெழுத்தாகும் என்று தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

ஜெர்மனியின் தைசென்க் ரூப் மரைன் சிஸ்டம்ஸ் நிறுவனமும் இந்தியாவின் மசாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் நிறுவனமும் இணைந்து ஏஐபி நீர்மூழ்கிகளை தயாரிக்க உள்ளன. பிரம்மோஸ் மற்றும் இந்தியாவின் அதிநவீன ஏவுகணைகளை பொருத்தும் வகையில் புதிய நீர் மூழ்கிகள் வடிவமைக்கப்படும். வரும் 2032-ல் முதல் நீர்மூழ்கி இந்திய கடற்படையில் இணைக்கப்படும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply