காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் ராஜ்மோகன் தகவல்

Priya
14 Views
2 Min Read

‘அரசுப் பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள உடற்​கல்வி ஆசிரியர் பணி​யிடங்​கள் விரை​வில் நிரப்​பப்​படும்’ என்று பள்​ளிக்​கல்வி அமைச்​சர் ராஜ்மோகன் தெரி​வித்​தார்.

சென்னை சிந்​தா​திரிப்​பேட்​டை​யில் உள்ள தனக்​கோடி நடுநிலைப்​பள்​ளி​யில் 2026-27-ம் கல்வி ஆண்​டுக்​கான புதிய மாணவர் சேர்க்​கையை பள்​ளிக்​கல்வி அமைச்​சர் ராஜ்மோகன் நேற்று ஆய்வு செய்​தார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: நடப்பு கல்வியாண்​டில் இது​வரை அரசுப் பள்​ளி​களில் ஒரு லட்​சத்து 52 ஆயிரத்து 625 பேர் சேர்க்கை பெற்​றுள்​ளனர். புதி​தாக 4 லட்​சம் மாணவர்​களை சேர்க்க இலக்கு நிர்​ண​யித்​துள்​ளோம்.

‘வெற்றி பள்​ளி’ என்ற புதிய திட்​டத்தை செயல்​படுத்த உள்​ளோம். இது தொடர்​பான அறி​விப்பு விரை​வில் வெளி​யிடப்​படும். அனைத்து அரசுப் பள்​ளி​களி​லும் கழிப்​பறை, குடிநீர் வசதி இருக்க வேண்​டும் என்​பது தொடர்​பானது​தான் நான் போட்ட முதல் கையெழுத்​து. அரசுப் பள்​ளி​களை மேம்​படுத்த முந்​தைய ஆட்​சி​யில் கொண்​டு​வரப்​பட்ட பேராசிரியர் அன்​பழகன் பள்ளி மேம்​பாட்​டுத் திட்​டம் குறித்து கேட்​கிறீர்​கள்.

எங்​களைப் பொருத்​தவரை​யில் ஒரு புதிய திட்​டத்​தால் எந்த அளவுக்கு பயன் ஏற்​படு​கிறது என்​பது​தான் முக்​கி​யம். திட்​டங்​களை மதிப்​பீடு செய்ய வேண்​டும். திட்​டத்​தின் விளைவு​களை பார்ப்​பது​தான் வருங்​காலத்​துக்​கான அரசி​யல். அதைச் செய்​யவே நாங்​கள் விரும்​பு​கிறோம்.

அரசு உதவி பெறும் பள்​ளி​களில் ஆங்​கில​வழி வகுப்​பு​கள் தொடங்க எந்​த​வித தடை​யும். இல்​லை. தமிழ்​வழிக் கல்​வி, ஆங்​கில​வழிக் கல்வி எது என்​றாலும் பள்​ளி​கள் தங்​கள் விருப்​பப்​படி தொடங்​கலாம். இரு மொழிக்​கொள்கை என்​பது தமிழ் மண்​ணுக்​கானது. அது நமது மரபிலேயே இருக்​கிறது. அரசுப் பள்​ளி​களில் காலி​யாக​வுள்ள உடற்​கல்வி ஆசிரியர் பணி​யிடங்​களை விரை​வில் நிரப்ப நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. அரசு விழாக்​களில் தமிழ்த்​தாய் வாழ்த்​துக்கு முன்​னுரிமை தரப்பட வேண்​டும். அது நமது பெரு​மை. அதற்​கான சட்ட நடவடிக்​கைகள் முறைப்​படி எடுக்​கப்​பட்டு வரு​கின்​றன.

பள்​ளி​களில் மாணவி​களின் பாது​காப்​புக்கு உயர் முக்​கி​யத்​து​வம் அளிக்​கப்​படும். மாணவி​கள் பாலியல்​ரீ​தியி​லான துன்​புறுத்​தலுக்கு ஆளாக நேரிட்​டால் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்​ற​வாளி​களுக்கு கடுமை​யான தண்​டனை பெற்​றுத்​தரப்​படும். கல்விக்​கொள்​கையை பொருத்​தவரை​யில் தற்​போதைய நமது எஸ்​சிஈஆர்டி பாடத்​திட்​டமே மிகச் சிறந்​த​தாக இருக்​கிறது. மாநில நலன் சார்ந்து மாநில கல்விக்​கொள்​கையே நமக்கு போது​மானது. இவ்​வாறு அமைச்​சர் கூறி​னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply