“உங்களுடனான தருணங்கள் ஸ்பெஷலானது!” – முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சிவகார்த்திகேயன்!

Priya
67 Views
1 Min Read

தமிழக முதல்வர் விஜயை, நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

விஜய் உடனான சந்திப்பு குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மக்களை என்டர்டெயின் செய்தது முதல் மாநிலத்தை வழிநடத்துவது வரை… சில பயணங்கள் அசாதாரணமானவை. தமிழக முதல்வர் சி.ஜோசப் விஜய் அவர்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது பெருமைக்குரிய விஷயம்.

ரசிகன் எக்ஸ்பிரஸ் தொடங்கி விஜய் அவார்ட்ஸ் மேடை, ‘தி கோட்’ படத்தில் இணைந்து நடித்தது, இன்று உங்களை சந்தித்த தருணங்கள் அனைத்தும் ஸ்பெஷலானது. இந்த சகோதரத்துவம் என்றென்றும் தொடரும்” என தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply