“ஆட்டோ ஓட்டுநர்களுக்கான அன்பும் மரியாதையும் மக்களிடம் சென்றடைய வேண்டும்” – ராப்பர் கிட் சாந்தே

Priya
11 Views
3 Min Read

மலேசிய தமிழ் ஹிப்-ஹாப் ராப்பர், பாடலாசிரியர் மற்றும் இசை தயாரிப்பாளர் கிட் சாந்தே (Kidd Santhe) வின் புதிய பாடலான “நா வேற லெவல்”, பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது . இப்பாடலை முன்னணி இசை நிறுவனமான சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

மலேசியாவில் உருவாகி வரும் புதிய தலைமுறை தமிழ் ஹிப்-ஹாப் இசையில் முக்கியமான குரலாக கொண்டாடப்படுபவர் கிட் சாந்தே (Kidd Santhe ). தமிழ், ஆங்கிலம், மலாய், பஞ்சாபி போன்ற பல மொழிகளை கலந்த ராப் ஸ்டைலே இவரின் தனிச்சிறப்பு.

சிறு வயதிலிருந்தே beatboxing மற்றும் இசையில் ஆர்வம் கொண்ட கிட் சாந்தே (Kidd Santhe), தனது 16-வது வயதில் பாடல்கள் தயாரித்து SoundCloud மூலம் பிரபலமானார். பின்னர் மலேசிய ஹிப்-ஹாப் குழுக்களுடன் இணைந்து பல ஹிட் பாடல்களை வெளியிட்டார். தற்போது உலகளாவிய “Desi Hip-Hop” இயக்கத்தில் முக்கியமான இளம் கலைஞர்களில் ஒருவராக வளர்ந்து வருகிறார்.

“API”, “SAMPAH”, “Ambani Money”, “Penjenayah” போன்ற பாடல்கள் மற்றும் ஆல்பங்கள் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்றார். குறிப்பாக “Ambani Money” பாடல் மூலம் இந்திய கலாச்சாரம், செல்வாக்கு மற்றும் இளைஞர்களின் ஆற்றலை ஹிப்-ஹாப் ஸ்டைலில் வெளிப்படுத்தியிருந்தார்.

தற்போது இந்திய கலாச்சார பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள அவரது அடுத்த பாடலான “நா வேற லெவல் ஆல்பம்” சென்னையில் வெளியிடப்பட்டது.

இதில் ராப்பர் கிட் சாந்தே பேசியதாவது, “இந்த பயணத்தில் என்னை நம்பி முழுமையாக ஆதரவு அளித்த Sony Music South மற்றும் Sony Music Malaysia-க்கு என் நன்றிகள்.

இந்த ஆல்பம் உருவாக காரணமான மிக முக்கியமான நபர் இயக்குநர். ஒரு storyboard-ஐ உயிரோட்டமுள்ள காட்சியாக மாற்றியது இயக்குநர் ரவி தான். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அதேபோல் மூன்று நாட்களிலேயே எனக்கு நடனம் கற்றுக்கொடுத்த நடன இயக்குநர் ஆகாஷ் அவர்களுக்கும் நன்றி.

ராவண ராம் என் சகோதரன் போன்றவர். Instagram-ல் ஒரு மெசேஜ் மூலம் தொடங்கிய நட்பு, ஒரே studio session-ல் “நா வேற லெவல்” பாடலை உருவாக்கியது. அவருடைய திறமை அசாதாரணமானது.

இந்த பாடல் மூலம் நான் என்னை ஒரு நடிகராகவோ அல்லது இசையமைப்பாளராகவோ காட்ட விரும்பவில்லை. தமிழ்நாட்டின் உண்மையான ஹீரோக்களை காட்டவே இந்த பாடலை உருவாக்கினேன் — ஆட்டோ ஓட்டுநர்களை. தினமும் மக்களை பாதுகாப்பாக ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்லும் அவர்கள் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையின் மறைக்கப்பட்ட ஹீரோக்கள். சென்னைக்கு முதன்முதலாக வந்தபோது, என் கார் பஞ்சர் ஆகி நின்றது. ஒரு ஆட்டோ ஓட்டுநருக்கு டயர் மாற்ற உதவிய அந்த தருணமே இந்த பாடலின் முழு கருத்தாக மாறியது. “நா வேற லெவல்” என்பது நான் அல்ல, ஆட்டோ ஓட்டுநர்கள் தான்.

அவர்கள் இன்று எரிபொருள் விலை உயர்வு, பராமரிப்பு செலவு, பைக் டாக்ஸி போட்டி போன்ற பல சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த பாடல் மூலம் அவர்களுக்கான மரியாதையும் அன்பும் மக்களிடம் சென்றடைய வேண்டும் என்பதே என் நோக்கம்.

நான் ஒரு மலேசிய இளைஞன். இசையை கொண்டு உங்கள் முன் வந்திருக்கிறேன். தமிழ்நாடு எனக்கு கொடுத்த அன்புக்கும் வரவேற்புக்கும் மனமார்ந்த நன்றி. “நா வேற லெவல்” பாடலை YouTube-ல் பார்த்து ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply