தமிழ் திரையுலகில் புதுமையான கதைக் களங்களுக்கு எப்போதும் ஒரு தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில், தற்போது சமூகத்தின் பல்வேறு கோணங்களை அலசும் விதமாக உருவாகியுள்ள திரைப்படம் Kanganam. கல்யாணி இ என்டர்பிரைஸ் சார்பில் கல்யாணி கே மற்றும் சிரஞ்சன் கே.ஜி. தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை (First Look Poster) தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
தேசிய நாடகப் பயிற்சிப்பள்ளி மற்றும் தென்னகப் பண்பாட்டு மையத்தில் பயிற்சி பெற்ற திறமையான இயக்குநரான அ.இசையரசன் இப்படத்தின் கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஏற்கனவே ‘என் கண்ணே’ என்கிற குறும்படத்திற்காக ஐந்து விருதுகளைக் குவித்து கவனத்தை ஈர்த்த இவர், இப்போது கங்கணம் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் தனது முத்திரையைப் பதிக்கத் தயாராகிவிட்டார். இப்படத்தின் போஸ்டர் வெளியானது முதலே சினிமா வட்டாரத்திலும், இணையதளத்திலும் பெரும் வைரலாகி வருகிறது.
கங்கணம் திரைப்படம் வெறும் கமர்ஷியல் படமாக மட்டுமில்லாமல், சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள சில முக்கியப் பிரச்சனைகளைத் தொட்டுச் செல்கிறது. படத்தின் இயக்குநர் இசையரசன் இது குறித்துக் கூறும்போது, “இப்படம் மூன்று வெவ்வேறு தளங்களில் பயணிக்கும் மனிதர்களின் பழிவாங்கும் உணர்ச்சியை மையமாக வைத்து உருவாகியுள்ளது. தன் குடும்பத்திற்கு வில்லனால் ஏற்பட்ட கொடூரத்திற்காக நாயகன் ஒருபுறம் துடிக்க, தனக்கு ஏற்பட்ட உச்சகட்ட அவமானத்திற்காக ‘பருத்திவீரன்’ சரவணன் மற்றொரு துருவமாகப் போராடுகிறார். அதே நேரத்தில், தங்கள் மக்களுக்கு நிகழும் அடக்குமுறை மற்றும் வன்கொடுமைக்கு எதிராக தலித் இளைஞர்கள் ஒரு குழுவாக இணைந்து பழி தீர்க்க முயல்கின்றனர். இந்த மூன்று துருவங்களும் ஒரே புள்ளியில் சந்திக்கும்போது ஏற்படும் விளைவுகளைச் சமூக சிந்தனையோடு படமாக்கியுள்ளோம்” என்றார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்
இயக்குநர் : அ.இசையரசன்
ஒளிப்பதிவு ;: G.A சிவசுந்தர்
இசை : செல்வா
இசை (பின்னணி ): தமீம் அன்சாரி
பாடல்கள் : யுகபாரதி
படத்தொகுப்பு : ஜோ.ஜெயபாலன்
தயாரிப்பு மேலாளர் : ஏ.ஆர். கார்த்திகேயன்
பாடகர்கள் : தெருக்குரல் அறிவு, ஸ்ரீ நிஷா, வி.எம்.மகாலிங்கம், கயல் கோபு
நடனம் : தினா, ஜாய் மதி
கலை இயக்குனர் : கல்லை தேவா
சண்டைக்காட்சி : மிரட்டல் செல்வா
ஒப்பனை ; இதயா ஜேம்ஸ்
ஸ்டில்ஸ் ; ரங்காராவ்
மக்கள் தொடர்பு : A. ஜான்

