நேரில் வராமல் 24 மணி நேரமும் ஆவணப்பதிவு: பொதுமக்களுக்கு மத்திய சென்னை சார்பதிவாளர் விழிப்புணர்வு

Priya
487 Views
2 Min Read

‘வரு​கை​யில்லா (பிரசன்​ஸ்​லெஸ்) பத்​திரப்​ப​திவு மூலம் 24 மணி நேர​மும் பதிவு செய்​ய​லாம் என’ மத்​திய சென்னை சார்​-பதிவாளர் நவீன் தெரி​வித்​தார்.

தமிழக பதிவுத்​துறை மற்​றும் அகில இந்​திய கட்​டுநர் சங்க தென்னக மையம் சார்​பில் அடுக்​கு​மாடி குடி​யிருப்பு மற்​றும் மனை பிரிவு​களின் முதல் விற்​பனைக்​கான பத்​திரப் பதிவை, சார்​-ப​தி​வாளர் அலு​வல​கத்​துக்கு நேரில் வராமல் இணை​ய​வழி​யில் மேற்​கொள்​ளும் வரு​கை​யில்லா பத்​திரப்​ப​திவு (பிரசன்​ஸ்​லெஸ் ரிஜிஸ்ட்​ரேஷன்​)​முறை குறித்த விழிப்​புணர்வு நிகழ்ச்சி அம்​பத்​தூரில் நேற்று நடை​பெற்​றது.

இந்​நிகழ்ச்​சியை சங்​கத்​தின் முன்​னாள் தலை​வர் பீஷ்மா ஆர்​.​ரா​தாகிருஷ்ணன் தொடங்கி வைத்​தார். இதில் மத்​திய சென்னை சார்​-ப​தி​வாளர் கே.நவீன் கலந்​து​கொண்டு புதிய நடை​முறை​கள் குறித்து விளக்​கம் அளித்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அடுக்​கு​மாடி குடி​யிருப்​பு​கள் மற்​றும் மனை​களின் முதல் விற்​பனை பத்​திரப் பதிவை ஆகஸ்ட் 17-ம் தேதி முதல் ‘பிரசன்​ஸ்​லெஸ்’ முறை​யில் மேற்​கொள்​வது கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

வழக்​க​மான நடை​முறை​யில், பத்​திரங்​களை முத்​திரைத்​தாளில் தயாரித்​து, ஆன்​லைனில் டோக்​கன் பெற்​று, குறிப்​பிட்ட நாளில் வாங்​குபவர், விற்​பவர் மற்​றும் சாட்​சிகள் என அனை​வரும் சார்​-ப​தி​வாளர் அலு​வல​கத்​துக்கு நேரில் செல்ல வேண்​டும்.

ஆனால், புதிய ‘பிரசன்​ஸ்​லெஸ்’ முறை​யில் பொது​மக்​கள் சார்​-ப​தி​வாளர் அலு​வல​கத்​துக்கு நேரில் வரவேண்​டிய அவசி​யமில்​லை. வார இறுதி நாட்​கள் உள்​ளிட்ட ஆண்​டின் 365 நாட்​களும், 24 மணி நேர​மும் தங்​களுக்கு வசதி​யான எந்​தவொரு இடத்​திலிருந்​தும் ஆன்​லைன் மூல​மாக பத்​திரப் பதிவை மேற்​கொள்ள முடி​யும்.

இதற்கு இணை​யதள வசதி​யுடன் கூடிய கணினி, மடிக்​கணினி அல்​லது செல்​போன் உடன் பயோமெட்​ரிக் சாதனங்​களான கைரேகை சாதனம், ஐரிஸ் ஸ்கேனர், வெப்​கேமரா ஆகியவை இருந்​தால் போது​மானது.

பொது​மக்​கள் தாங்​கள் இருக்​கும் இடத்​திலிருந்தே ஆவணங்​களைச் சமர்ப்​பித்து ஆன்​லைன் மூல​மாக பதிவை நிறைவு செய்ய முடி​யும். இதன் நடை​முறை​கள் குறித்து இந்​தக் கூட்​டத்​தில் பொது​மக்​களுக்கு விளக்​கமளிக்​கப்​பட்​டது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

இந்​நிகழ்​வில் அகில இந்​திய கட்​டுநர் சங்க தென்னக மையம் தலை​வர் கே.கோபி​நாதன், செய​லா​ளர் ஏ.சத்​தி​ய​நா​ராயணா, இந்​திய கட்​டுநர் சங்க, தமிழக கிளை​யின் சிஎம்​டிஏ – டிடிசிபி கமிட்​டித் தலை​வர்​ எஸ்​.​ராமபிரபு உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​றனர்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply