வார கடைசி நாட்களை முன்னிட்டு சென்னையில் இருந்து 865 பேருந்துகள் இயக்கம்

Priya
2 Views
1 Min Read

 வார இறுதி நாட்​களை முன்​னிட்டு சென்​னை​யில் இருந்து பல்​வேறு ஊர்​களுக்கு 865 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

இதுகுறித்து அரசு விரைவுப் போக்​கு​வரத்​துக் கழக மேலாண் இயக்​குநர் மோகன் வெளி​யிட்ட அறிக்​கை: வார இறுதி நாட்​களை முன்​னிட்டு ஜூன் 19, 20, 21 ஆகிய நாட்​களில் சென்னை உட்பட தமிழகத்​தின் பல்​வேறு நகரங்​களில் இருந்​தும் மற்ற பகு​தி​களுக்கு பலரும் பயணம் மேற்​கொள்​வார்​கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதை கருத்​தில் கொண்​டு, தமிழ்​நாடு அரசுப் போக்​கு​வரத்​துக் கழகங்​கள் தினசரி இயக்​கும் பேருந்​துகளு​டன் கூடு​தலாக சிறப்பு பேருந்​துகளை இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னை கிளாம்​பாக்​கத்​தில் இருந்து திரு​வண்​ணா​மலை, திருச்சி, கும்​பகோணம், மதுரை, திருநெல்​வேலி, நாகர்கோ​வில், கன்​னி​யாகுமரி, தூத்​துக்​குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூருக்கு 19-ம் தேதி (நாளை) 350 பேருந்​துகள், 20-ம் தேதி 365 பேருந்​துகள் இயக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

சென்னை கோயம்​பேட்​டில் இருந்து திரு​வண்​ணா​மலை, நாகை, வேளாங்​கண்​ணி, ஓசூர், பெங்​களூரு​வுக்கு 19, 20-ம் தேதி​களில் தலா 55 பேருந்​துகளும், மாதவரத்​தில் இருந்து தலா 20 பேருந்துகளும் இயக்​கப்​படும். இதே​போல, பெங்​களூரு, திருப்​பூர், ஈரோடு, கோவை​யில் இருந்​தும் பல்​வேறு இடங்​களுக்கு 100 சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன.

வார இறு​தி​யில் பயணம் மேற்​கொள்ள 19-ம் தேதி 6,425 பேர், 20-ம் தேதி 3,287 பேர், 21-ம் தேதி 7,213 பேர் முன்​ப​திவு செய்​துள்​ளனர். இந்த எண்​ணிக்கை மேலும் அதி​கரிக்க வாய்ப்பு உள்​ள​தால் தொலை​தூரப் பயணம் மேற்​கொள்ள இருக்​கும் பயணி​கள் நெரிசலைத் தவிர்க்க, www.tnstc.in என்ற இணை​யதளம் மற்​றும் டிஎன்​எஸ்​டிசி செயலி மூலம் முன்​ப​திவு செய்​ய​லாம்.

சொந்த ஊர் சென்​றவர்​கள் ஞாயிற்​றுக்​கிழமை (ஜூன் 21) சென்​னை, பெங்​களூரு உள்​ளிட்ட நகரங்​களுக்கு திரும்ப வசதி​யாக பயணி​களின் தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன. சிறப்பு பேருந்​துகள் இயக்​கத்​தைக் கண்​காணிக்க அனைத்து பேருந்து நிலை​யங்​களி​லும் போதிய அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply