பயிர்க் கடன்களை பாரபட்சமின்றி தள்ளுபடி செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

Priya
6 Views
1 Min Read

பாரபட்​சமின்றி அனைத்து விவ​சா​யிகளுக்​கும் பயிர்க்​கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும் என தமாகா தலை​வர் வாசன் தெரி​வித்​தார்.

சிவகங்​கை​யில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியதாவது: பயிர்க்​கடன் தள்​ளு​படி அறி​விப்​பில் தெளி​வான விளக்​கம் இல்​லை. பாரபட்​சமின்றி அனைத்து விவ​சா​யிகளுக்​கும் பயிர்க்​கடனை தள்​ளு​படி செய்ய வேண்​டும். மின் கட்டண

உயர்வு இல்லை என்​பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். மின்​வெட்டு இல்​லாத சூழலை உறுதி செய்​வது அரசின் பொறுப்பாகும். சட்​டம், ஒழுங்கு பிரச்​சினை அதி​கரித்து வருகிறது.

தமாகா தனது அடித்​தளத்தை மேலும் வலுப்​படுத்​தவே தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணியி​லிருந்து வில​கியது. கூட்​டணி குறித்து தேர்​தல் நேரத்​தில் முடிவு செய்​யப்​படும். இவ்வாறு கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply