மாநகராட்சி தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர மாணவர்கள் ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

Priya
16 Views
1 Min Read

சென்னை மாநகராட்சி வெளி​யிட்ட செய்​திக் குறிப்​பு: சென்னை மாநகராட்சி சார்​பில், மத்​திய அரசின் என்​சி​விடி சான்​றிதழுடன் கூடிய தொழிற்​ப​யிற்சி வழங்​கப்பட உள்​ளது.

அதன்​படி, கணினி இயக்​குபவர் மற்​றும் நிகழ்ச்சி தொகுப்​பாளர் (1 ஆண்​டு), குழாய் பொருத்​துநர் (1 ஆண்​டு), பொருத்​துநர் (2 ஆண்​டு), கம்​மியர்- மோட்​டார் வாக​னம் (2 ஆண்​டு), மின் பணி​யாளர் (2 ஆண்​டு), எலக்ட்​ரானிக் மெக்​கானிக் (2 ஆண்​டு) ஆகிய பாடப் பிரிவு​களுக்கு மொத்​தம் 184 மாணவர்​கள் சேர்க்​கப்பட உள்​ளனர்.

இதில், சென்னை மாநக​ராட்சி பள்​ளி​களில் பயின்ற மாணவர்​களுக்​கும், சென்னை மாநக​ராட்சி ஊழியர்​களின் குழந்​தைகளுக்​கும் மாணவர்​கள் சேர்க்​கை​யில் முன்​னுரிமை அளிக்​கப்​படும்.

​ப​யிற்​சி​யில் சேர வயது வரம்பு 14 முதல் 40 வயது ஆகும். பெண்​களுக்கு வயது வரம்பு கிடை​யாது. படிக்​கும் போது தகு​தி​யுடைய மாணவர்​களுக்கு ஒரு மாதம் அல்​லது 3 மாதங்​கள் நிறு​வனங்​களின் அனு​ம​தியை பொறுத்​து, ரூ.10,500 முதல் ரூ.15,000 வரை உதவித் தொகை​யுடன் கூடிய பயிற்சி அளிக்​கப்​படும்

மாதம்​தோறும் ரூ.750 பயிற்சி உதவித் தொகை மற்​றும் தமிழ் புதல்​வன், புது​மைப் பெண் திட்​டத்​தின் கீழ்,மாணவ, மாண​வியருக்கு மாதம் ரூ.1,000 வழங்​கப்​படும்.

விண்​ணப்​பப் படிவத்தை சென்னை மாநக​ராட்சி தொழிற்​ப​யிற்சி நிலை​யத்​தில் இலவச​மாக பெறலாம். அல்​லது www.chennaicorporation.gov.in என்ற இணை​யதளம் மூலம் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம்.

பூர்த்தி செய்த விண்​ணப்​பத்​தை, சென்னை மாநக​ராட்சி தொழிற் பயிற்சி நிலை​யம், லாயிட்ஸ் குடி​யிருப்​பு, முத்​தையா தெரு அரு​கில், ராயப்​பேட்​டை, சென்​னை- 600014 என்ற முகவரி​யில் வரும் 30-ம் தேதிக்​குள் சமர்ப்​பிக்க வேண்டும். மேலும் விவரங்​களுக்கு 044 – 2847 3117 என்ற எண்​ணில் தொடர்​பு​ கொள்​ளலாம். இவ்​வாறு செய்​திக்​ குறிப்​பில்​ தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply