ஒருங்கிணைந்த குரூப்​-2, குரூப்-2 ஏ தேர்வு: விளையாட்டு வீரர்கள் ஆவணங்களை பதிவேற்ற வேண்டும் – டிஎன்பிஎஸ்சி

Priya
2 Views
1 Min Read

ஒருங்​கிணைந்த குரூப்​-2, குரூப்​-2ஏ எழுத்​துத் தேர்​வில் குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண் பெற்ற விளை​யாட்டு வீரர்​கள் உரிய ஆவணங்​களை ஜூலை 20-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும் என டிஎன்பிஎஸ்சி அறி​வித்​துள்​ளது.

இது தொடர்​பாக டிஎன்​பிஎஸ்சி தேர்வு கட்​டுப்​பாட்டு அலு​வலர் ப.ஸ்ரீவெங்​கடபிரியா நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: குறுஞ்செய்தி, மின்னஞ்சல் ஒருங்​கிணைந்த குரூப்-2 மற்​றும் குரூப்​-2ஏ எழுத்​துத் தேர்​வில் குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண் பெற்று தங்​கள் ஆன்​லைன் விண்​ணப்​பத்​தில் சிறந்த விளை​யாட்டு வீரர் என்று உரிமை கோரிய விண்​ணப்​ப​தா​ரர்​கள் தாங்​கள் பெற்ற விளை​யாட்டு சாதனை ஆவணங்​களை இணை​ய​வழி​யில் பதிவேற்​றம் செய்ய வேண்​டும்.

இதுகுறித்த தகவல் அவர்​களுக்கு குறுஞ்​செய்தி மற்​றும் மின்​னஞ்​சல் வாயி​லாக​வும், தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் வெளி​யிடப்​பட்​டுள்ள குறிப்​பாணை மூல​மாக​வும் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

அவர்​கள் தங்​கள் அசல் விளை​யாட்டு சான்​றிதழ்​களின் ஸ்கேன் செய்​யப்​பட்ட நகல்​கள் அனைத்​தை​யும் படிவம் ஒன்று முதல் 5 வரை​யில் குறிப்​பிடப்​பட்​டுள்​ள​வாறு தேர்​வாணை​யத்​தின் இணை​யதளத்​தில் ஒரு​முறை பதிவு (ஓடிஆர்) வாயி​லாக ஜூலை 11 (இன்​று) முதல் 20-ம் தேதி நள்​ளிரவு 11.59 மணிக்​குள் பதிவேற்​றம் செய்ய வேண்​டும். அவ்​வாறு செய்​யத் தவறி​னால், அந்த விண்​ணப்​ப​தா​ரர்​களின் விண்​ணப்​பம் நிராகரிக்​கப்​படும். இவ்​வாறு அவர்​ கூறி​யுள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply