ஏ.ஐ. மூலம் போலி வீடியோ: நடிகை சுனைனா கடும் கண்டனம்

Priya
752 Views
1 Min Read

திரை பிரபலங்​களின் உரு​வத்​தையும் குரலை​யும் ஏ.ஐ. மூலம் தவறாகப் பயன்​படுத்​தும் சம்​பவங்​கள் சமீபகாலமாக அதி​கரித்து வரு​கின்​றன. இதற்கு முன் ராஷ்மிகா மந்​தனா, கீர்த்தி சுரேஷ், ஜான்வி கபூர் உள்​பட பல நட்​சத்​திரங்​கள் இது போன்ற போலியான வீடியோக்​களால் பாதிக்​கப்​பட்​டிருந்​தனர். இந்நிலையில் நடிகை சுனைனா​வும் பாதிக்​கப்பட்​டுள்​ளார்.

இதுபற்றி அவர் வெளி​யிட்​டுள்ள பதி​வில், “செயற்கை நுண்​ணறிவைப் பயன்​படுத்தி எனது முகத்தை ஆபாச​மான உள்​ளடக்​கத்​தில் இணைத்து உரு​வாக்​கப்​பட்ட வீடியோ பரப்​பப்​பட்டு வரு​கிறது. அதில் என்​னைப் போலவே தோற்​றம் கொண்ட ஒரு​வர் சித்​தரிக்​கப்​பட்​டுள்​ளார். இது பொய்​யானது, தவறானது, ஆதா​ரமற்​றது.

இத்​தகைய இழிவான செயலைக் கண்டு மிகுந்த அதிர்ச்​சி​யும் அரு​வருப்​பும் அடைகிறேன்; இதை வன்​மையாகக் கண்​டிக்​கிறேன்.

இது பாலியல் துன்​புறுத்​தலுக்கு இணை​யானது, அவதூறானது. இந்​தி​யச் சட்​டங்​களின்​படி இது குற்​றச் செயல். இத்​தகைய செயலை முற்​றி​லும் ஏற்​றுக்​கொள்​ளவும் பொறுத்​துக்​கொள்​ளவும் முடி​யாது. எனவே, சம்​பந்​தப்​பட்ட அனைவரும் உடனடி​யாக அந்த வீடியோவை பதிவேற்​று​வதை, பகிர்​வதை நிறுத்த வேண்​டும். இந்த உரு​வாக்கி வெளி​யிட்ட அல்​லது பரப்​பியவர்களுக்கு எதிராக சட்ட நட​வடிக்​கைகளை மேற்​கொள்​வேன்” என்று கூறியுள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply