‘பணம் கொடுக்காமல் பட்டாசு வாங்கக் கூடாது’ – போலீஸாருக்கு விருதுநகர் எஸ்பி எச்சரிக்கை

Priya
613 Views
1 Min Read

விருதுநகர் மாவட்டத்தில் பணம் கொடுக்காமல் போலீஸார் பட்டாசு வாங்கக் கூடாது என எஸ்.பி. கவுதம் கோயல் எச்சரித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளும், 1,500-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளும் இயங்கி வருகின்றன. தீபாவளி சீசன் காலங்களில் போலீஸார் தங்கள் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கடைகளில் பணம் கொடுக்காமல் பட்டாசு வாங்குவது, கிப்ட் பாக்ஸ் வாங்குவது போன்ற செயல்களில் ஈடுபடுவதால் தொடர்ந்து புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம்கோயல் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் பட்டாசு ஆலைகள் மற்றும் பட்டாசு கடைகளில் பணம் கொடுக்காமல் பட்டாசுகள் மற்றும் கிப்ட் பாக்ஸ் வாங்கக் கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply