ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் 21 தங்கம் உட்பட 85 பதக்கங்களைக் கைப்பற்றினர். இந்தியாவுக்காகப் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகள் விவரம் வருமாறு:
>> துப்பாக்கிச் சுடுதல்: இளவேனில் வாலறிவன், சோனம் மஸ்கர், விதர்ஸா வினோத் (மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணி- வெள்ளி), இளவேனில் வாலறிவன் (மகளிர் 10 மீட்டர் ஏர் ரைபிள் -வெள்ளி), ருத்ரான்க்ஷ் பாட்டீல், பார்த் மானே, ஹிமான்ஷு தில்லான், ஹிமான்ஷு தில்லான் (ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணி- வெள்ளி), ஹிமான்ஷு தில்லான் ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள் தனிநபர்- வெள்ளி), ருத்ரான்க் ஷ் பாட்டீல் (ஆடவர் 10 மீட்டர் ஏர் ரைபிள்-வெண்கலம்), பரினாஸ் தலிவால், ரைசா தில்லான், மகேஸ்வரி சவுகான், அனந்த்ஜீத் சிங் நருகா (மகளிர் ஸ்கீட் – அணிப் பிரிவு -வெண்கலம்), அனந்த்ஜீத் சிங் நருகா பாவ்தேக் சிங் கில், மைராஜ் அகமது கான் (ஆடவர் ஸ்கீட் அணிப் பிரிவு-வெண்கலம்), அனந்த்ஜீத் சிங் நருகா, பரினாஸ் தலிவால் (கலப்பு ஸ்கீட் அணிப் பிரிவு-வெண்கலம்), ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர், ருத்ரான்க் ஷ் பாட்டீல், நீரஜ் குமார்(ஆடவர் 50 மீட்டர் ரைபிள் அணிப் பிரிவு-வெள்ளி), கமல்ஜீத், சுருச்சி சிங் (கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் அணி- தங்கம்), இஷா சிங் (மகளிர் 25 மீட்டர் பிஸ்டல் -வெள்ளி), நீரு தண்டா, மணிஷா கீர், ஆஷிமா அஹ்லாவத் (மகளிர் டிராப் அணிப்பிரிவு-வெள்ளி), நீருதண்டா (மகளிர் டிராப் பிரிவு-தங்கம்), கைனன்செனாய், நீரு தண்டா (கலப்பு டிராப்-தங்கம்)
>> கலப்பு தற்காப்புக் கலை: சுச்சிகா தரியால்(மகளிர் 60 கிலோ- வெண்கலம்)
>> கிரிக்கெட்: இந்திய மகளிர் அணி (தங்கம்), இந்திய ஆடவர் அணி – தங்கம்.
>> சாப்ட் டென்னிஸ்: ஜெய் மீனா (ஆடவர் -ஒற்றையர்-வெண்கலம்).
>> பளுதூக்குதல் : மீராபாய் சானு(மகளிர் 49 கிலோ-வெள்ளி)
>> பாட்மிண்டன்: இந்திய அணி (ஆடவர் அணி-வெண்கலம்)
>> படகோட்டுதல்: சத்னம் சிங், சல்மான் கான் (ஆடவர் இரட்டையர் ஸ்கல்ஸ் பிரிவு-வெண்கலம்)
>> வுஷு: ரோஷிபினா தேவி (மகளிர் 60 கிலோ சண்டா-வெள்ளி)
>> தடகளம்: சீமா குமாரி(மகளிர் 10 ஆயிரம் மீட்டர்-வெண்கலம்), மனு டி.எஸ், பூவம்மா, விஷால் தென்னரசு, வித்யா ராம்ராஜ் (கலப்பு 4×400 மீட்டர் தொடர் ஓட்டம்-வெள்ளி), விதர்சா வினோத், ஆஷி சவுக்சி, திலோத்தமா சென் (மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பி அணி -வெள்ளி), மன்பிரீத் கவுர் (மகளிர் குண்டு எறிதல்-வெண்கலம், குல்வீர் சிங் (ஆடவர் 10 ஆயிரம் மீட்டர்-வெள்ளி), பரணிகா இளங்கோவன் (மகளிர் போல் வால்ட்-வெண்கலம்), சாவன் பெர்வால் (ஆடவர் மாரத்தான்-வெள்ளி), தஜிந்தர் சிங் தூர் (ஆடவர் குண்டு எறிதல் -வெள்ளி), பிராச்சி சவுத்ரி (மகளிர் 400 மீட்டர் -வெண்கலம்), ஹரிதா பத்ரா (மகளிர் 200 மீட்டர் -வெண்கலம்), அன்சி சோஜன்(மகளிர் நீளம் தாண்டுதல் -வெள்ளி), தேஜஸ்வின் சங்கர் (ஆடவர் டெகத்லான்-வெண்கலம்), பாருல் சவுத்ரி (மகளிர் 3 ஆயிரம் மீட்டர் ஸ்டீபிள்சேஸ்-வெண்கலம்), சர்வேஷ் குஷாரே (ஆடவர் உயரம் தாண்டுதல்-வெள்ளி), வித்யா ராம்ராஜ் (மகளிர் 400 மீட்டர் தடை ஓட்டம்-வெண்கலம்), குல்வீர் சிங் (ஆடவர் 1,500 மீட்டர் ஓட்டம்-வெள்ளி), பாருல் சவுத்ரி (மகளிர் 5 ஆயிரம் மீட்டர்-வெண்கலம்), முரளி சங்கர் (ஆடவர் நீளம் தாண்டுதல்-வெள்ளி), யஷ் வீர் சிங் (ஆடவர் ஈட்டி எறிதல்-வெள்ளி), ரோஹித் யாதவ் (ஆடவர் ஈட்டி எறிதல்-வெண்கலம்), குரிந்தர்வீர் சிங், ஸ்னேகா, அனிமேஷ் குஜுர், ஹரிதா பத்ரா (கலப்பு 4×100 தொடர் ஓட்டம்-வெண்கலம்), குல்வீர் சிங் (ஆடவர் 5 ஆயிரம் மீட்டர்-வெண்கலம்), பூஜா சிங் ( மகளிர் உயரம் தாண்டுதல்-வெண்கலம்), கிரண் பஹல், பூவம்மா, பிராச்சி சவுத்ரி, வித்யா ராம்ராஜ் (மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டம் – தங்கம்),தர்ம்வீர் சவுத்ரி, மனு, ஜெய்குமார், விஷால் (ஆடவர் 4×400 மீட்டர் தொடர் ஓட்டம்-வெண்கலம்)
>> கபடி: இந்திய மகளிர் அணி(தங்கம்), இந்திய ஆடவர் அணி(தங்கம்).
>> குராஷ்: பிங்கி பல்ஹரா(மகளிர் 78 கிலோ – வெண்கலம்)
>> டேபிள் டென்னிஸ்: தியா சிதாலே, மானுஷ் ஷா (கலப்பு இரட்டையர்-வெண்கலம்)
>> ஸ்குவாஷ்: ஜோஷ்னா சின்னப்பா, வேலவன் செந்தில்குமார் (கலப்பு இரட்டையர் -வெண்கலம்), அபய் சிங்(ஆடவர் ஒற்றையர்-வெள்ளி), அனஹத் சிங் (மகளிர் ஒற்றையர் – வெள்ளி), அனஹத் சிங், ஜோஷ்னா சின்னப்பா, தன்வி கன்னா, ஷமீனா ரியாஸ் (மகளிர் அணிப்பிரிவு -வெண்கலம்), அபய் சிங், வீர் சோட்ரானி, வேலவன் செந்தில்குமார், சுராஜ் குமார் சந்த் (ஆடவர் அணிப்பிரிவு-வெண்கலம்).
>> குத்துச்சண்டை: நரேந்தர் பெர்வால் (ஆடவர்-+90கிலோ-வெண்கலம்), கபில் பொகாரியா (ஆடவர் 90 கிலோ -வெண்கலம்), லவ்லினா போர்கோஹெயின் (மகளிர் 75 கிலோ -தங்கம்), பர்வீன் ஹூடா (மகளிர் 65 கிலோ – தங்கம்), அங்குஷ் பங்கால் (ஆடவர் 80 கிலோ -தங்கம்), பிரியா கங்காஸ் (மகளிர் 60 கிலோ-வெண்கலம்)
>> வில்வித்தை: ஜோதி சுரேகா வென்னம், பிரித்திகா பிரதீப், சிகிதா தனிபர்த்தி(மகளிர் காம்பவுண்ட் அணி் – தங்கம்), சிகிதா தனிபர்த்தி, சஹில் ஜாதவ் (கலப்பு காம்பவுண்ட் அணி-தங்கம்), சஹில் ஜாதவ், கணேஷ் மணிரத்னம் திருமுரு, குஷால் தலால் (ஆடவர் காம்பவுண்ட் அணி-தங்கம்), கணேஷ் மணிரத்னம் திருமுரு(ஆடவர் காம்பவுண்ட் தனிநபர்-வெண்கலம்), தீரஜ் பொம்மதேவரா, நீரஜ் சவுகான், யஷ்தீப் போகே (ஆடவர் அணிப் பிரிவு வெள்ளி), அங்கிதா பகத், கும்கும் மோஹோத், கீர்த்தி சர்மா (மகளிர் அணி ரீகர்வ் பிரிவு – தங்கம்), கும்கும் மோஹோத், தீரஜ் பொம்மதேவரா (கலப்பு அணி ரீகர்வ்-வெள்ளி), கும்கும் மோஹோத்(மகளிர் தனிநபர் ரீகர்வ்-தங்கம்), நீரஜ் சவுகான் (ஆடவர் தனிநபர் ரீகர்வ்-வெண்கலம்),
>> மல்யுத்தம்: சுனில் குமார் (ஆடவர் கிரெகோ-ரோமன் 87 கிலோ- வெண்கலம்), நிதேஷ் குமார் (கிரெகோ ரோமன் 97 கிலோ-வெள்ளி), சுஜீத் கல்கல் (ஆடவர் 65 கிலோ-தங்கம்), அமன் ஷெராவத் (ஆடவர் 57 கிலோ -தங்கம்), தீபக் பூனியா (ஆடவர் 97 கிலோ -வெண்கலம்), அன்திம் பங்கால் (மகளிர் 53 கிலோ-வெள்ளி)
>> செயிலிங்: பிரின்ஸ் குரிசிங்கால் நோபிள், மனு பிரான்சிஸ்(ஆடவர் ஸ்கிப் பிரிவு-வெள்ளி), ஹர்ஷிதா தோமர், ஷீத்தல் வர்மா (மகளிர் ஸ்கிப் பிரிவு-வெண்கலம்), நேத்ரா குமணன் (மகளிர் டிங்கி பிரிவு-வெண்கலம்)
>> செபக்தக்ரா: இந்திய அணி(ஆடவர் குவாட்ரன்ட் பிரிவு-வெண்கலம்)
>> ஹாக்கி: இந்திய மகளிர் அணி (தங்கம்), இந்திய ஆடவர் அணி (தங்கம்).
>> கோல்ஃப்: பிரணவி அர்ஸ் (மகளிர் தனிநபர்-தங்கம்), பிரணவி அர்ஸ், ஆதித்தி அசோக், தீக்சா தாகர் (மகளிர் அணிப்பிரிவு -வெள்ளி).

