“எடப்பாடி பழனிசாமியும், திமுகவும் ஒன்றுதான்” – அமைச்சர் செங்கோட்டையன்

Priya
772 Views
1 Min Read

“தமிழ்நாடு அரசியலில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், திமுகவும் ஒன்றுதான்” என்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டுக்கு வருவாய் அதிகரிக்க தேவையான துறை சார்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெளிவாக தெரிவித்துள்ளார். அதற்கேற்றார் போல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.” என்றார்.

திமுக ஆட்சிக் காலத்தில் வெள்ள நீரை வெளியேற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை தற்போது தமிழக வெற்றிக் கழகம் செய்தது போல் பெயர் வாங்கிக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு விமர்சித்தது குறித்து கேட்டபோது, “ஆட்சிக் காலத்தில் இது அனைத்தும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள். மேலும் கடந்த ஆட்சியில் வெள்ள நீர் வெளியேற்று நடவடிக்கைகள் முழுதாக மேற்கொள்ளப்படவில்லை. தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற நான்கு மாதங்களில் கடந்த ஆட்சியாளர்கள் செய்யத் தவறியவற்றை விரைவாக செய்து வருகிறோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “திமுகவினர் அரசியல் நாகரீகத்தை கடைப்பிடிக்க தவறி உள்ளனர். முதல்வர் குறித்து தேவையற்ற அவதூறு பேச்சுக்களை பேசுவதை அவர்கள் முன்னெடுத்துள்ளனர். அரசியலில் நாகரீகம் கடைப்பிடிப்பது முக்கியமான ஒன்று” என்று கூறினார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி திமுகவினர் அவதூறாகப் பேசுவதை ஊக்குவிக்கும் விதமாக கருத்து தெரிவித்து வருவது குறித்து கேள்வி எழுப்பியபோது, “எடப்பாடி பழனிசாமியும், திமுகவும் வேறு அல்ல. இருவருமே அரசியலைப் பொறுத்தவரை ஒன்றுதான்.” என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply