ஆசிய பாரா விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கம் உட்பட 24 பதக்கங்கள்

Priya
818 Views
6 Min Read

5-வது ஆசிய பாரா விளையாட்டு போட்டி ஜப்​பானின் ஐச்​சி-நகோயா மாகாணத்​தில் நடை​பெற்று வரு​கிறது. இதன் 2-வது நாளான நேற்று ஆடவருக்​கான உயரம் தாண்​டு​தலில் டி 47 பிரி​வில் இந்​தி​யா​வின் நிஷாத் குமார் 2.04 மீட்​டர் உயரம் தாண்டி புதிய சாதனை​யுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

நடப்பு ஆசிய பாரா விளை​யாட்டு போட்​டி​யில் நிஷாத் குமார் வெல்​லும் 2-வது தங்​கப் பதக்​கம் இது​வாகும். நேற்று முன்​தினம் நடை​பெற்ற நீளம் தாண்​டு​தலில் டி 47 பிரி​விலும் நிஷாத் குமார் தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தார்.

இதன் மூலம் ஒரே தொடரில் 2 தங்​கப் பதக்​கம் வென்ற 3-வது இந்​தி​யர் என்ற பெரு​மையை பெற்றார் நிஷாத் குமார். இதற்கு முன்​னர் அங்​குர் தாமா (ஆட​வருக்​கான 5 ஆயிரம் மீட்​டர் ஓட்​டம், 1500 மீட்​டர் ஓட்​டம்), ஷீத்​தல் தேவி (வில்​வித்​தை​யில் மகளிருக்​கான தனி​நபர் காம்​பவுண்ட், கலப்பு அணி​கள் பிரிவு) ஆகியோர் சீனா​வின் ஹாங்​சோ​வில் நடை​பெற்ற ஆசிய பாரா விளை​யாட்டு போட்​டி​யில் 2 தங்​கப் பதக்​கம் வென்​றிருந்​தனர்.

வட்டு எறிதலில் தங்​கம்

ஆடவருக்​கான வட்டு எறிதலில் எஃப் 44/64 பிரி​வில் இந்​தி​யா​வின் தேவேந்​தர் குமார் 49.71 மீட்​டர் தூரம் எறிந்து தங்​கப் பதக்​கம் வென்​றார். மற்ற இந்​திய வீரர்​களான ராகேஷ் வெள்​ளிப் பதக்​க​மும், பர்​தீப் குமார் வெண்​கலப் பதக்​க​மும் கைப்​பற்​றினர்.

ஆடவருக்கான வட்டு எறிதலில் எஃப்​51/52/53 பிரி​வில் இந்​தி​யா​வின் பிரணவ் சூர்மா 11.66 மீட்​டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்​றார். மற்​றொரு இந்​திய வீர​ரான ராம் ரத்​தன் சிங் 10.35 மீட்​டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார்.

400 மீட்​டர் ஓட்​டத்​தில் தங்​கம்

மகளிருக்​கான டி 20 பிரிவு 400 மீட்​டர் ஓட்​டத்​தில் இந்​தி​யா​வின் தீப்தி ஜீவன்ஜி பந்தய தூரத்தை 56.36 விநாடிகளில் கடந்து முதலிடம் பிடித்து போட்டி சாதனை​யுடன் தங்​கப் பதக்​கம் வென்​றார்.

200 மீட்​டர் ஓட்​டத்​தில் தங்​கம்

மகளிருக்​கான 200 மீட்​டர் ஓட்ட பந்​த​யத்​தில் டி 12 பிரி​வில் இந்தியா​வின் சிம்​ரன் பந்தய தூரத்தை 24.80 விநாடிகளில் கடந்து புதிய சாதனை​யுடன் முதலிடம் பிடித்து தங்​கப் பதக்​கம் வென்றார். மற்​றொரு இந்​திய வீராங்​க​னை​யான தேஜல்பென்டாமோர் (25.23) வெண்கலப் பதக்​கம் கைப்​பற்​றி​னார்.

Advertisement

இறு​திப் போட்​டி​யில் ஷீத்​தல்

வில்​வித்​தை​யில் மகளிருக்​கான காம்​பவுண்ட் தனி​நபர் அரை இறு​திப் போட்​டி​யில் இந்​தி​யா​வின் ஷுத்​தல் தேவி, ஜப்​பானின் ஷினோரா அயாவை எதிர்த்து விளை​யாடி​னார். இதில் 19 வயதாகும் ஷீத்​தல் தேவி 145-137 என்ற கணக்​கில் வெற்றி பெற்று இறு​திப் போட்​டிக்கு முன்​னேறி​னார். மகளிருக்​கான வில்​வித்​தையில் டபிள்யூ 1 பிரி​வில் அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் சுவாதி சவுத்ரி 6-2 என்ற கணக்​கில் தென் கொரி​யா​வின் யுன்ஹீ லீயை தோற்​கடித்​தார்.

ஈட்டி எறிதலில் வெள்ளி

ஆசிய பாரா விளை​யாட்டு போட்​டி​யில் ஆடவருக்​கான ஈட்டி எறிதலில் எஃப் 54 பிரி​வில் இந்​தி​யா​வின் பிரதீப் குமார் 27.4 மீட்​டர் தூரம் எறிந்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். அதேவேளை​யில் எஃப் 53 பிரி​வில் இந்​தி​யா​வின் ஆயுஷ் குமார் 17.88 மீட்​டர் தூரம் எறிந்து வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​னார்.

தமிழகத்​தின் சஹானா அசத்​தல்

ஆசிய பாரா விளை​யாட்டு போட்​டி​யில் மகளிர் டேபிள் டென்னிஸில் நேற்று மட்​டும் இந்​தியா 4 வெண்​கலப் பதக்​கம் வென்​றது. இந்​தி​யா​வின் ரபி பேபி சஹானா கிளாஸ் 9 பிரிவு அரை இறு​தி​யில் 8-11, 2-11, 4-11 என்ற செட் கணக்​கில் 5 முறை பாராலிம்​பிக்​கில் தங்​கப் பதக்​கம் வென்ற சீனா​வின் மாவோ ஜிங்​டியனிடம் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் பெற்​றார். சஹானா தமிழகத்தை சேர்ந்​தவர் ஆவார்.

கிளாஸ் 6 பிரிவு அரை இறு​தி​யில் பிராச்சி பாண்டே 9-11, 2-11, 8-11 என்ற செட்க ணக்​கில் ஈராக்​கின் பாராலிம்​பிக் சாம்​பிய​னான நஜ்லா அல்​-தய்​யேனி​யிடம் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்கம் கைப்​பற்​றி​னார். இதன் மூலம் இவர்​கள் இரு​வரும் நின்ற நிலை​யில் விளை​யாடும் பிரி​வில் ஆசிய பாரா விளை​யாட்​டுப் போட்​டி​யில் பதக்​கம் வென்ற முதல் இந்​திய பாரா டேபிள் டென்னிஸ் வீராங்​க​னை​கள் என்ற பெரு​மை​யைப் பெற்​றனர்.

கிளாஸ் 6 பிரிவு அரை இறு​தி​யில் பிராச்சி பாண்டே 9-11, 2-11, 8-11 என்ற செட்க ணக்​கில் ஈராக்​கின் பாராலிம்​பிக் சாம்​பிய​னான நஜ்லா அல்​-தய்​யேனி​யிடம் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​னார். இதன் மூலம் இவர்​கள் இரு​வரும் நின்ற நிலை​யில் விளை​யாடும் பிரி​வில் ஆசிய பாரா விளை​யாட்​டுப் போட்​டி​யில் பதக்​கம் வென்ற முதல் இந்​திய பாரா டேபிள் டென்னிஸ் வீராங்​க​னை​கள் என்ற பெரு​மை​யைப் பெற்​றனர்.

கிளாஸ் 4-5 பிரிவு அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் பவினா படேல் 7-11, 5-11, 7-11 என்ற செட் கணக்​கில் 8 முறை பாராலிம்​பிக் சாம்​பிய​னான சீனா​வின் ஜாங் பியானிடம் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார். கிளாஸ் 3 அரை இறு​தி​யில் இந்​தி​யா​வின் சோனல்​பென் படேல் 7-11, 5-11, 6-11 செட் என்ற கணக்​கில் தென் கொரி​யா​வின் ஜியு யூனிடம் தோல்வி அடைந்து வெண்​கலப் பதக்​கம் பெற்​றார். ஆடவருக்​கான கிளாஸ் 1 பிரி​வில் இந்​தி​யா​வின் ஜெஹான் மதன் 4-11, 7-11, 3-11 என்ற செட் கணக்​கில் தென் கொரியா​வின் கிம் ஹியோனுக்​கிடம் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்​கம் கைப்​பற்​றி​னார்.

துப்​பாக்கி சுடு​தல்

துப்​பாக்கி சுடு​தலில் ஆடவருக்​கான 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் எஸ்​ஹெச் 1 பிரி​வில் இந்​தி​யா​வின் மணீஷ் நார்​வால் 233.7 புள்ளிகளை குவித்து 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார். மேலும் வரும் 2028-ம் ஆண்டு லாஸ் ஏஞ்​சல்ஸ் நகரில் நடை​பெற உள்ள பாராலிம்​பிக் போட்​டிக்​கும் தகுதி பெற்​றார்.

பவர்​லிஃப்​டிங்​கில் வெள்ளி ஆசிய பாரா விளை​யாட்டு போட்டியில் ஆடவருக்​கான பவர்​லிஃப்​டிங்​கில் 65 கிலோ எடைப் பிரி​வில் இந்​தி​யா​வின் அசோக் குமார் மாலிக் 192 கிலோ எடையை தூக்கி 2-வது இடம் பிடித்து வெள்​ளிப் பதக்​கம் வென்​றார்.

ஸ்ருஷ்டிக்கு வெண்​கலம்

துப்​பாக்கி சுடு​தலில் மகளிருக்​கான 10 மீட்​டர் ஏர் பிஸ்​டல் எஸ்​ஹெச் 1 பிரி​வில் இந்​தி​யா​வின் ஸ்ருஷ்டி அரோரா 214.7 புள்​ளி​கள் குவித்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார்.

குண்டு எறிதலில் வெண்​கலம்

ஆடவருக்​கான குண்டு எறிதலில் எஃப் 11 பிரி​வில் இந்​தி​யா​வின் பிர​வீன் குமார் 13.86 தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார்.

நீச்​சலில் வெண்​கலம்

ஆடவருக்​கான நீச்​சலில் 400 மீட்​டர் ப்ரீஸ்​டைல் எஸ் 11 பிரி​வில் இந்தி​யா​வின் ஹிமான்ஷு நந்​தால் பந்தய தூரத்தை 5:10.91 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் கைப்​பற்​றி​னார். ஆடவருக்​கான 200 மீட்​டர் தனி​நபர் மெட்லே எஸ்எம் 7 பிரி​வில் இந்​தி​யா​வின் நிரஞ்​ஜன் முகுந்​தன் 2:57.01 விநாடிகளில் இலக்கை அடைந்து 3-வது இடம் பிடித்து வெண்​கலப் பதக்​கம் வென்​றார்.

பாட்​மிண்​டன்

ஆடவருக்​கான பாட்​மிண்​டனில் எஸ்​எல் 3 பிரி​வில் இந்​தி​யா​வின் பிரமோத் பகத், குமார் நிதேஷ் ஆகியோர் அரை அரை இறு​திக்கு முன்​னேறினர். இதன் மூலம் இவர்​கள் குறைந்த பட்​சம் வெண்கலப் பதக்​கம் கைப்​பற்​று​வதை உறுதி செய்​துள்​ளனர். ஜப்பான் ஆசிய பாரா விளை​யாட்டு போட்​டி​யில்​ நேற்​று மட்​டும்​ இந்​தி​யா 5 தங்​கம்​, 6 வெள்​ளி, 13 வெண்​கலம்​ என 24 பதக்கங்களை வென்றது. இது​வரை இந்​தி​யா 9 தங்​கம்​, 11 வெள்ளி, 15 வெண்​கலம்​ என 35 பதக்​கங்​களை வென்​று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply