அனிருத் – காவ்யா திருமண வரவேற்பு: முதல்வர் விஜய்க்கு கலாநிதி மாறன் நேரில் அழைப்பு

Priya
904 Views
1 Min Read

சன் குழும தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறன் – இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரது திருமணம் நவம்பr 21-ல் நடத்த நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதற்கான திருமண வரவேற்பு அழைப்பிதழை அனிருத், கலாநிதி மாறன், காவேரி மாறன் ஆகியோர் முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து வழங்கினர்.

கடந்த சில மாதங்களாகவே இசையமைப்பாளர் அனிருத்துக்கும், சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அப்போது அது வதந்தி என்பதுபோல் அனிருத் ட்வீட் செய்து முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில், தற்போது அனிருத் – காவ்யா மாறன் திருமணம் முடிவாகியுள்ளது. திருமண வரவேற்பு நிகழ்ச்சி நவம்பர் 21-ல் நடைபெறும் என்ற அறிவிப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை முதல்வர் விஜய்யிடம் கலாநிதி மாறன் – காவேரி தம்பதி மற்றும் அனிருத் இன்று நேரில் வழங்கினர்.

முன்னதாக, நேற்று முன்தினம் (அக்.15) ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ படம் ரிலீஸ் ஆனது. படத்தில் முதல் நாள் முதல் காட்சிக்கு காவ்யா மாறன் வந்திருந்தது கவனம் பெற்றது. ஜெயிலர் 2 படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. படத்தில் அனிருத் இசையும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

காவ்யா மாறன் ஐபிஎல்லில் ஹைதராபாத் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply