தமிழகத்துக்கு நீண்ட காலத்துக்கு நன்மை தரக்கூடிய தலைவர்களை அடையாளம் காண வேண்டும்: இளைஞர்களுக்கு பேரவை தலைவர் வலியுறுத்தல்

Priya
901 Views
1 Min Read

பழம்​பெரும் காங்​கிரஸ் வாதி​யான ஏகாம்​பரம், பள்​ளிப்​பட்டு தொகு​தி​யில் 3 முறை எம்​எல்​ஏ​வாக இருந்​துள்​ளார். அவரது நூற்​றாண்டு நினைவு விழா பள்​ளிப்​பட்​டில் நேற்று நடை​பெற்​றது.

சோளிங்​கர் முன்​னாள் எம்​எல்ஏ ஏ.எம்​.​முனிரத்​தினம் தலை​மை​யில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் தமிழக காங்​கிரஸ் முன்​னாள் தலை​வர்​கள் தங்​க​பாலு, திரு​நாவுக்​கரசர் மற்​றும் காங்​கிரஸ் நிர்​வாகி​கள் பலர் கலந்​து​கொண்​டனர்.

இந்​நிகழ்ச்​சி​யில் சிறப்பு விருந்​தின​ராக தமிழக சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் கலந்​து​கொண்டு ஏகாம் ​பரத்​தின் படத்​தைத் திறந்​து​வைத்​தார்.

நிகழ்ச்​சி​யில் சட்​டப்​பேரவை தலை​வர் ஜே.சி.டி.பிர​பாகர் பேசி​ய​தாவது: அரசி​யலுக்கு யார் வேண்​டு​மா​னாலும் வரலாம். ஆனால், மக்​களுக்கு சேவை செய்ய வேண்​டும் என்ற உணர்வை ஏற்​படுத்​திக் கொள்ள வேண்​டும்.

ஜாதி, மதத்​துக்கு அப்​பாற்​பட்டு அனைத்து தரப்பு மக்​களுக்​கும் பணி​யாற்​றிய​தால்​தான் 100 ஆண்​டு​கள் கடந்​தும் ஏகாம்பர ரெட்டி மக்​களின் இதயங்​களில் வாழ்ந்து கொண்​டிருக்​கிறார்.

இளம் தலை​முறை சட்​டப்​பேர​வை, நாடாளு​மன்ற உறுப்​பினர்​கள் ஏகாம்​பரத்​தைப்​போல அரசி​யலில் ஒழுக்​கம், சேவை, எளிமையை கடைபிடித்து மக்​கள் பணி​யாற்ற வேண்​டும்.

ஏகாம்​பரம் எம்​எல்​ஏ​வாக இருந்த காலத்​தில் எம்​எல்​ஏக்​களுக்கு மக்​கள் அதிக மரி​யாதை அளித்​தனர். காலப்​போக்​கில் அது படிப்​படி​யாகக் குறைந்​து​விட்​டது. இது ஏன் என​ பொது வாழ்க்​கை​யில் இருப்​பவர்​கள் ஆராய வேண்​டும்.

தமிழகத்​துக்கு நீண்ட காலத்​துக்கு நன்மை தரக்​கூடிய​வர்​களை, மக்​களை நல்​வழிப்​படுத்​தும் தலை​வர்​களை அடையாளம் காணும் தன்​மையை இளைஞர்​கள் வளர்த்​துக்​கொள்ள வேண்​டும்.

இப்​பகுதி மக்​களின் கோரிக்​கையை ஏற்று பள்​ளிப்​பட்​டில் அரசின் சார்​பில் அவருக்கு சிலைஅமைக்​க​வும், திருத்​தணி மார்க்​கெட் பகு​தி​யில் காந்தி சிலை அமைக்​க​வும் முதல்​வர் பார்​வைக்​குக் கொண்டு சென்று நடவடிக்​கை எடுக்​கப்​படும்​ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply