வந்தே மாதரத்தை அவமதிப்பதா? – காங். தேசபக்தி குறித்து ராஜ்நாத் சிங் கேள்வி

Priya
759 Views
1 Min Read

கட்சி நிகழ்​வு​களில் ‘வந்தே மாதரம்’ பாடலின் முதல் இரு சரணங்​களை மட்​டுமே பாட காங்கிரஸ் செயற்​குழு எடுத்த முடிவுக்கு மத்​திய பாது​காப்​புத்​துறை அமைச்​சர் ராஜ்நாத் சிங் கடும் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார். காங்​கிரஸின் இந்த நடவடிக்கை அவர்​களின் தேசபக்​தி​யின் மீதே கேள்விக் குறியை எழுப்​பி​யுள்​ள​தாக அவர் சாடி​யுள்​ளார்.

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்​திர தின விழா​வின் போது, தேசி​யப் பாடலான வந்தே மாதரம் பாடப்​பட்ட நிகழ்​வில் காங்​கிரஸ் தலைவர் மல்​லி​கார்​ஜுன கார்கே மற்​றும் சோனியா காந்தி ஆகியோர் உரை​யாடிக் கொண்​டிருந்​த​தாக பாஜக குற்​றம் சாட்டியதுடன், அவர்​கள் பகிரங்க மன்​னிப்பு கேட்க வேண்​டும் என்​றும் வலியுறுத்தி​யது.

இந்த சர்ச்​சையைத் தொடர்ந்​து, கடந்த புதன்​கிழமை கூடிய காங்கிரஸ் செயற்​குழு கூட்​டத்​தில், 1937-ம் ஆண்டு கட்​சி​யின் தீர்மானத்தை மேற்​கோள் காட்​டி, இனி கட்சி நிகழ்ச்​சிகளில் வந்தே மாதரம் பாடலின் முதல் இரு சரணங்​கள் மட்​டுமே பாடப்படும் என முடிவு செய்​யப்​பட்​டது.

காங்​கிரஸின் இந்த முடிவுக்கு எதி​ராக நேற்று எக்ஸ் தளத்​தில் பதிவிட்ட ராஜ்​நாத் சிங், வந்தே மாதரத்தை கவுரவிக்க காங்​கிரஸ் மறுப்​பது மிக​வும் வருந்​தத்​தக்​கது என்​றும், அரசி​யலமைப்பு ரீதியாக இது ஒரு மிக​வும் ஆபத்​தான போக்கு என்​றும் குறிப்பிட்டுள்​ளார். நாட்​டின் உயரிய அமைப்​பான நாடாளு​மன்​றம் இயற்​றும் சட்​டங்​களுக்​கும், தேசிய பாடலுக்​கும் கீழ்ப்​படிய மறுப்பவர்​களின் தேசபக்தி சந்​தேகத்​திற்​குரிய​தாகிறது என அவர் கடுமை​யாக விமர்​சித்​துள்​ளார்.

மேலும், 1937-ல் முஸ்​லிம் லீக்​கின் அதிதீ​விர கோரிக்​கைகளுக்கு காங்​கிரஸ் பணிந்​ததே நாட்​டின் பிரி​வினைக்​குக் காரண​மாக அமைந்​தது. இப்​போதும் அது​போல தீவிர​வாத சக்​தி​களு​டன் காங்கிரஸ் சமரசம் செய்​வது நாட்​டின் எதிர்​காலத்​திற்​குப் பேராபத்து என்​றும் அவர் எச்​சரித்​துள்​ளார். காங்​கிரஸின் இந்த முடிவு முற்​றி​லும் அரசி​யலமைப்​புக்கு எதிரானது என்​றும், எதிர்​காலத்​தில் தீவிர அரசி​யல் நெருக்​கடியை உரு​வாக்​கும்​ என்​றும்​ அவர்​ தெரி​வித்​துள்​ளார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply