அப்பா எங்கனு தேடாதீங்க.! கோட்டையில இருக்குற மக்கள் நலத்திட்டக் கோப்புகளை போய் பாருங்க.. அங்க நா இருப்பேன்

Priya
18 Views
1 Min Read

தமிழகத்தில் எத்தனையோ பிச்சனைகள் புதிதாக தலைதூக்கி இருக்கிறது, ஒரு பக்கம் மின்வெட்டு பிரச்சனை, இன்னொரு பக்கம் டெல்டா விவசாயிகளுக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் திறக்க முடியாத சூழல் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

தான் ஆட்சி பொறுப்பில் இருந்த 5 ஆண்டுகளிலும் ஒருவருடம் கூட தவறாமல் குறித்த நேரத்தில் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் அது நடக்கவில்லை; இப்படி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்து விரிவாக, விளக்கமாக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருக்க கூடிய உதயநிதி ஸ்டாலின் எடுத்துரைத்தார்.

ஆனால் இதற்கெல்லாம் உரிய பதில் சொல்லாத முதல்வர் என்ன செய்தார்.! கையை கண்ணனுக்கு மேலே வைத்து கொண்டு எங்கே உங்க அப்பாவை காணோம் என்று இதை ஒரு பதிலாக சொல்லி இருக்கிறார். முதல்வரே அப்பாவை சட்டமன்றத்தில் தேடாதீர்கள், பல லட்சக்கணக்கான மக்களின் மனதில் பதிந்திருக்கிறார் என்று குறிப்பிட்டு முதல்வர் விஜய்யின் தேவையற்ற செயலுக்கு உரிய பதிலடி கொடுத்தார் திமுக தலைவர்.

நீங்கள் தேடுகின்ற இடத்தில் நான் இல்லை என்றால், மக்கள் தேடுகிற இடத்தில் முதல் ஆளாக நான் நிற்பேன் என்றார். சட்டமன்றத்தில் நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் மன்றத்தில் எப்போதும் இருக்கிறேன். நான் அரசியலுக்கு வந்து 60 வருடங்களாகி விட்டது, இத்தனை ஆண்டுகளும் நான் மக்களோடு மக்களாக தான் இருக்கிறேன். ஆட்சியில் இருந்தாலும், இல்லவிட்டாலும் மக்களுக்காக பணியாற்ற கூடியவர்கள் தான் திமுக-வினர்.

கோட்டையில் உள்ள கோப்புகளின் மூலமாகவும் என்னை நீங்கள் பார்க்கலாம். கலைஞர் உரிமைத் தொகை உள்ளிட்ட மக்கள் நலத்திட்டக் கோப்புகளைப் பாருங்கள், இந்த ஸ்டாலின் இருப்பான். மகளிர் உரிமை திட்டம் இருக்கும் வரை இந்த ஸ்டாலின் தான் முதல்வர். அதே போல இனி திமுகவு-க்கு கூட்டணியே தேவையில்லை என ஏராளமானோர் சொலிகிறார்கள், அதையும் பரிசீலிப்போம் என்றார் மு.க.ஸ்டாலின். 

Share This Article
Leave a Comment

Leave a Reply