‘​டாக்ஸிக்’ போன்ற படத்தை உருவாக்குவது சவாலானது: யஷ் விவரிப்பு

Priya
850 Views
3 Min Read

கீது மோகன்​தாஸ் இயக்​கத்​தில் யஷ் கதா​நாயக​னாக நடித்​துள்ள படம், ‘த டாக்​ஸிக்’. இதில் கியாரா அத்​வானி, நயன்​தா​ரா, ஹூமா குரேஷி, தாரா சுதா​ரி​யா, ருக்​மணி வசந்த் என பலர் நடித்​துள்​ளனர்.

கன்​னடம், ஆங்​கில மொழிகளில் உரு​வாகி​யுள்ள இந்​தப் படம் இந்​தி, தெலுங்​கு, தமிழ், மலை​யாளம் உள்​ளிட்ட மொழிகளில் டப் செய்​யப்​பட்டு ஆக.26-ல் வெளி​யாக இருக்​கிறது.

கேவிஎன் புரொடக் ஷன்ஸ் சார்​பில் வெங்​கட் நாராயணா, மான்ஸ்​டர் மைண்ட் புரொடக் ஷன்ஸ் சார்​பில் யஷ் தயாரித்​துள்ள இந்​தப் படத்​தின் டிரெய்​லர் வெளி​யீட்டு விழா பெங்​களூரு​வில் நடை​பெற்​றது. கன்னட சூப்​பர் ஸ்டார் சிவ ராஜ்கு​மார் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்டு படக்​குழு​வினரை வாழ்த்​தி​னார்.

விழா​வில் நடிகர் யஷ் பேசி​ய​தாவது: இந்த திரைப்​படத்​தைக் கன்​னடம், தமிழ், தெலுங்கு என்று தனித்​தனி​யாகப் பார்க்க வேண்​டிய தில்​லை. இது ஓர் இந்​திய திரைப்​படம். இதில் அந்​தந்த திரை​யுல​கைச் சேர்ந்த திறமை​யான நடிகர்​கள் ஒன்​றாக இணைந்​துள்​ளனர்.

இத்​தனை சிறந்த நடிகர்​கள் ஒன்​றாகச் சேரும்​போது சில சங்​கடங்​கள் வரலாம். ஆனால் இதில் தங்​கள் ஈகோவை ஒதுக்கி வைத்​து​விட்​டு, இந்​திய சினி​மாவை உலக அரங்​குக்கு கொண்டு செல்ல வேண்​டும் என்ற ஒரே நோக்​கத்​துக்​காக இணைந்​த​தால் தான் இந்​தப் படம் சாத்​தி​ய​மானது.

இந்​தப் படத்தை உரு​வாக்​கு​வது மிக​வும் கடின​மான ஒன்​று. இது ஒரு வித்​தி​யாச​மான முயற்​சி. மிக​வும் சவாலானது, இது ஒரு வணிக ரீதி​யான படம் அல்ல.

வாழ்க்​கை​யில் ஒன்​றைச் செய்ய விரும்​பும்​போது, எது​வும் உங்​களைத் தடுக்​கக்​கூ​டாது என்று நம்​பு​கிறேன். நம்​மில் பலர், மோச​மாகப் பேசுபவர்​களை​யும், ‘உங்​களால் இதைச் செய்ய முடி​யாது’ என்று சொல்​பவர்​களை​யும் பார்க்​கிறோம். ஆனால், நான் அப்​படி சொல்​வதைக் கேட்​ப​தில்​லை.

யாராவது என்​னிடம் ‘உங்​களால் இதைச் செய்ய முடி​யாது’ என்று சொன்​னால், அதை அவர்​களின் முட்​டாள்​தனம் என்றே கருதுகிறேன். அதற்​கான முயற்​சி​யை​யும் நேரத்​தை​யும் உழைப்​பை​யும் செலுத்​தும்​போது, வாழ்க்​கை​யில் எதை​யும் சாதிக்க முடி​யும்.

இப்​படத்​துக்​காக 200 நாட்​கள் உழைத்​திருக்​கிறோம். எங்​கள் உழைப்​பும் செல​வழித்த ஒவ்​வொரு ரூபா​யும் படத்​தில் தெரி​யும். இதில் நடித்த ஒவ்​வொரு​வருக்​கும் நன்றி சொல்​லக் கடமைப்​பட்​டிருக்​கிறேன். நயன்​தாரா இதில் இணைந்​த​போது, கால்​ஷீட் தொடர்​பான சிக்​கல்​கள் இருந்​தன. இருந்​த​போதும் அவர் படப்​பிடிப்பை முழு​மை​யாக முடித்​துக்​கொடுத்​தார். அவர் தனது சிறந்த பங்​களிப்பை வழங்​கி​னார்.

இது​போன்ற திரைப்​படத்​தைத் தேர்ந்​தெடுத்​து, அதில் அவர் வெளிப்​படுத்​தி​யுள்ள நடிப்​புக்கு மிகுந்த துணிச்​சலும் நேர்த்​தி​யும் தேவை. அவர் உண்​மை​யிலேயே ஒரு ‘லேடி சூப்​பர் ஸ்டார்​’​தான். இந்த படத்​துக்​குப் பிறகு இதில் நடித்​துள்​ளவர்​களின் அன்​பும் மரி​யாதை​யும் இன்​னும் பல மடங்கு உயரும். இவ்​வாறு யஷ் கூறி​னார்.

நடிகை நயன்​தாரா கூறும்​போது, ‘‘யஷைப் போல கடின​மாக உழைக்​கும் ஒரு நடிகரை இது​வரை பார்த்​ததே இல்​லை. படப்​பிடிப்​புத் தளத்​தில் ஒவ்​வொரு நாளும் அவர் செயல்​படும் விதத்​தைக் கண்டு வியந்​தேன்.

கேஜி எஃப் 2 படத்​துக்​குப் பிறகு புதிய படங்​களை உடனடி​யாக ஒப்​புக்​கொள்​ளாமல், ‘டாக்​ஸிக்’ படத்​தின் கதைக்​களம், தயாரிப்​புத் திட்​ட​மிடல் மற்​றும் கதா​பாத்​திர வடிவ​மைப்​புக்​காக மட்​டுமே சுமார் நான்​கரை ஆண்​டு​களுக்​கும் மேலாகத் தனது நேரத்​தைச் செல​விட்​டு உள்​ளார் யஷ்.

ஒரு பிரம்​மாண்ட வெற்​றிக்​குப் பிறகும் அவசரமின்​றி, சரி​யான கதையைத் தேர்ந்​தெடுத்து அதை உலகத் தரத்​தில் கொண்டு வர அவர் எடுத்​துக்​கொண்ட கால அவகாசம் அவருடைய அர்ப்​பணிப்​பைக் காட்​டு​கிறது. அவரிடம் என்​னைக் கவர்ந்த விஷ​யம் இது.

இந்த நீண்ட தயாரிப்​புப் பயணத்​தில் யாஷ் தனது குடும்​பத்​தினருடன் செல​விடும் நேரத்​தைப் பெரு​மள​வில் தியாகம் செய்​துள்​ளார்” என்​றார். விழா​வில், தயாரிப்​பாளர் வெங்​கட் நாராயணா, நடிகைகள் கியாரா அத்​வானி, ஹூமா குரேஷி, தாரா சுதா​ரி​யா, இயக்​குநர் கீது மோகன்​தாஸ் ஆகியோர் பேசினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply