தவெக ஆட்சி குறித்து இப்போது மதிப்பிட இயலாது: திருமாவளவன்

Priya
7 Views
1 Min Read

தவெக​வின் ஒரு மாத கால ஆட்சி குறித்து இப்​போது மதிப்​பீடு சொல்ல இயலாது என விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சியின் தலை​வர் திரு​மாவளவன் தெரி​வித்​தார்.

திருச்சி விமான நிலை​யத்​தில் நேற்று செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: தமிழக அரசு வெளி​யிட்​டுள்ள வெள்ளை அறிக்கை குறித்து திமுக​தான் பதில் சொல்ல வேண்​டும். தவெக ஆட்சி அமைத்து ஒரு மாதம்​தான் ஆகிறது. இப்​போது அவர்​களுக்கு கற்றுக் கொள்​ளக்​கூடிய காலம். எனவே, இந்த ஒரு மாத ஆட்சி பற்றி இப்​போது மதிப்​பீடு சொல்ல இயலாது.

அதி​முக​வில் நடப்​பது அவர்​களு​டைய உள்​கட்சி விவ​காரம். மக்​களால் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட எம்​எல்​ஏக்​கள் அந்த பதவியை ராஜி​னாமா செய்​கிற அளவுக்கு உள்ளே என்ன நெருக்​கடி என்​பது அவர்​களுக்குத் தான் தெரி​யும். இது மிகுந்த அதிர்ச்சி அளிக்​கக்​கூடியது. திரா​விட இயக்​கம் என்ற முறை​யில் அதி​முக வலு​வாக, சிதறாமல் இருப்​பது தமிழக அரசி​யலுக்கு நல்லது.

ஆளூர் ஷாந​வாஸ் தலை​மையோடு தொடர்​பில் இருக்​கிறார். வெளி​நாடு சென்று திரும்​பி​யுள்ள அவர் விரை​வில் என்னை சந்​திக்க வாய்ப்பு இருக்​கிறது. அவருடன் கலந்து பேசி முடிவு எடுக்​க​வில்லை என்​பதைத் தவிர அவருக்கு வேறு வருத்​தம் இல்​லை.

வன்​னிஅரசு அமைச்​சர் பதவி​யேற்​கும் விழாவுக்கு அவர் தாமத​மாக வந்த நிலை​யில் அவருடைய வாக​னம் உள்ளே அனு​ம​திக்​கப்​பட​வில்லை என்​பது​தான் உண்​மை. ஆனால், திட்​ட​மிட்டு அவரைப்​பற்றி திரும்​பத் திரும்ப அவதூறுகளை பரப்பி வரு​கின்​றனர். கட்​சிக்​குள் எந்த குழப்​ப​மும், பிரச்​சினை​யும் இல்லை. இவ்​வாறு அவர் கூறி​னார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply