“தவெக அரசு கும்பகர்ணன் போல தூங்குகிறது” – பழனிசாமி விமர்சனம்

Priya
882 Views
2 Min Read

சென்னை மாநகரில் குடிநீர் பிரச்​சினை நிலவி வரும் நிலை​யில், தவெக அரசு கும்​பகர்​ணன் போல தூங்கு​கிறது என அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி கூறி​யுள்​ளார்.

சேலம் விமான நிலை​யத்​தில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறியது: உச்ச நீதி​மன்ற தீர்ப்​பின்​படி மாதாந்​திர வாரி​யாக கர்​நாடக அணை​களில் இருந்து காவிரி​யில் தண்​ணீர் திறந்​து​விட வேண்​டும். ஆனால், உச்ச நீதி​மன்​றம் தீர்ப்பு வழங்​கி​யும், கர்​நாடகா அரசு காவிரி​யில் இருந்து தமிழகத்​துக்கு தண்​ணீர் திறந்து விடு​வ​தில்​லை.

கர்​நாடக முதல்​வர் சிவக்​கு​மார் மேகே​தாட்​டு​வில் கட்​டா​யம் அணை கட்​டியே தீரு​வோம் எனக்​கூறு​வது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. இந்த விவ​காரத்தில் தற்​போது காவிரி நடு​வர்மன்​றம் தேவையற்​றது ஏனெனில் 2018-ம் ஆண்டு உச்ச நீதி​மன்​றத்​தில் காவிரி நதி நீர் பிரச்​சினை குறித்து தெளி​வான தீர்ப்பு கூறப்​பட்​டுள்​ளது.

கர்​நாடக முதல்​வரை, தமிழக முதல்​வர் விஜய் சந்​திக்க செல்​வது தவிர்க்​கப்பட வேண்​டும். இது தேவையற்​றது. மேகே​தாட்டு அணை பிரச்​சினை உணர்​வுப்​பூர்​வ​மானது. இப்​பிரச்​சினை குறித்து தவெக அரசு அனைத்​துக் கட்சி கூட்​டத்தை கூட்டி விவா​திக்க வேண்​டும்.

தவெக அரசு தேர்​தல் வாக்​குறு​தி​யில் கூறியபடி விவ​சாய கடனை முழு​மை​யாக தள்​ளு​படி செய்ய வேண்​டும். வேளாண் நிதி​நிலை அறிக்​கை​யில் விவ​சா​யிகளுக்கு முழு​மை​யாக கடன் தள்​ளு​படி அறிவிப்பை வெளி​யிட வேண்​டும். அப்​படி வெளி​யி​டா​விட்​டால் அதி​முக சார்​பில் விவ​சாயிகளை திரட்டி மாநிலம் தழு​விய கண்டன ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​படும்.

தமிழக முதல்​வர் காவிரி நதி நீர் பிரச்​சினை​யில் எவ்​வித கருத்​தும் கூறாமல் மவுன புரட்சி செய்​கிறார். அதி​முக ஆட்சி காலத்​தில் வறட்சி வரும்​போது வறட்​சியை எப்​படி கையாள்​வது, விவ​சா​யிகள், விவ​சாய தொழிலா​ளர்​கள், ​மக்​கள் எப்​படி பாதிக்​கப்​படு​கிறார்​கள் என கண் காணித்து முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை நாங்​கள் எடுத்​தோம்.

சென்னை மாநகரில் குடிநீர் பிரச்​சினை நிலவி வரும் நிலை​யில், தவெக அரசு கும்​பகர்​ணன் போல தூங்கு​கிறது. மின்​கட்​ட​ணம் கணக்​கெடுப்பு விவ​காரத்​தில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்​டும். அதி​கம் செலுத்திஇருந்​தால் அடுத்தமாதம் சரிசெய்யப்​படும் என்​று கூறு​வதை ஏற்​க முடி​யாது. இவ்​வாறு கூறி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply