5 முக்கிய நிலையங்களில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை: மத்திய அமைச்சரிடம் அஸ்வத்தாமன் மனு

Priya
690 Views
1 Min Read

தமிழகத்​தின் 5 முக்​கிய ரயில் நிலை​யங்​களில் விரைவு ரயில்கள் நின்று செல்ல நடவடிக்கை எடுக்​கக் கோரி, ரயில்வே அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ண​விடம் தமிழக பாஜக செய​லா​ளர் அஸ்வத்தாமன் மனு அளித்​துள்​ளார்.

டெல்​லி​யில் மத்​திய ரயில்​வே, தகவல் தொடர்​பு, தகவல் ஒலிபரப்​புத் துறை அமைச்​சர் அஸ்​வினி வைஷ்ணவை தமிழக பாஜக செய​லா​ளர் அஸ்​வத்​தாமன் சந்​தித்​து, கோரிக்கை மனுவை வழங்​கி​னார்.

அதில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: நாகர்​கோ​வில் அந்த்​யோதயா அதி​விரைவு ரயில் (20691/20692) பண்​ருட்​டி​யிலும், முத்​துநகர் அதி​விரைவு ரயில் (12693/12694) உளுந்​தூர்​பேட்​டை​யிலும், மங்​களூரு சென்ட்​ரல் அதி​விரைவு ரயில் (12685/12686) குடி​யாத்​தத்​தி​லும், மும்பை எல்​டிடி – நாகர்​கோ​வில் விரைவு ரயில் (16351/16352) கடம்​பூரிலும், சோழன் விரைவு ரயில் (22675/22676) குத்​தாலத்​தி​லும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்​டும்.

மேற்​கண்ட 5 நகரங்​களும் விவ​சா​யம், தொழில், வணி​கம், கல்​வி, பொருளா​தார நடவடிக்​கை​களில் குறிப்​பிடத்​தக்க பங்​களிப்​பைச் செய்து வரு​கின்​றன.

இப்​பகு​தி​களில் முக்​கிய ரயில்​கள் நின்று சென்​றால், விவ​சா​யிகள், வணி​கர்​கள், மாணவர்​கள், பணிக்​குச் செல்​வோர் மற்​றும் அன்​றாடப் பயணி​கள் பெரிதும் பயனடை​வார்​கள். மேலும், சுற்​றுப்​பகுதி மக்​களின் நீண்​டதூர போக்​கு​வரத்து தேவை​களை​யும் எளி​தாகப் பூர்த்தி செய்ய முடி​யும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply