சூர்யா பட வாய்ப்புகளை நிராகரித்தது ஏன்? – நஸ்ரியா விளக்கம்!

Priya
776 Views
1 Min Read

12 ஆண்டுகளுக்குப் பிறகு ‘சீன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு மீண்டும் கம்பேக் கொடுத்துள்ள நடிகை நஸ்ரியா, சூர்யா பட வாய்ப்புகளை மறுத்ததாக வெளியான தகவல்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

‘ரோமன்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய மலையாள வெற்றிப் படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் சூர்யா, நஸ்ரியா முதன்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் கொச்சி விழா நிகழ்வின் போது, முன்னதாக நடைபெற்ற ஹைதராபாத் விளம்பர விழாவில் சூர்யா பேசியது குறித்து நஸ்ரியா விளக்கம் அளித்தார்.

ஹைதராபாத் விழாவில் பேசிய சூர்யா, “நான் நஸ்ரியாவுடன் இணைந்து பணியாற்ற மூன்று முறை வாய்ப்பு கேட்டேன். ஆனால் அவர் அதனை நிராகரித்துவிட்டார். நான்காவது முயற்சியில்தான் அவர் ஒப்புக்கொண்டார்” என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாகப் பேசிய நஸ்ரியா: “சூர்யா நான் அவரது மூன்று படங்களை நிராகரித்துவிட்டதாகக் கூறியது வெறும் நகைச்சுவை மட்டுமே. அது உண்மையான நிராகரிப்பு அல்ல. தேதிகள் பொருந்தாத காரணத்தாலும், சில குழப்பங்களாலுமே அது சாத்தியப்படாமல் போனது. சூர்யா சாரின் திரைப்படத்தை யாராவது வேண்டாம் என்று நிராகரிப்பார்களா?” என்று விளக்கம் அளித்தார்.

’சீன்’ படத்தில் ‘மாயா’ என்ற ஆக்‌ஷன் கலந்த முக்கியக் கதாபாத்திரத்தில் நஸ்ரியா நடித்துள்ளார். இப்படத்தில் சூர்யா ‘டிஎஸ்பி இன்பராஜ்’ என்ற காவல்துறை அதிகாரியாகவும், மலையாள நடிகர் நஸ்லென் ‘ஈஸ்வரன்’ என்ற வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இப்படம் நாளை (நவம்பர் 6) தீபாவளியை முன்னிட்டு உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply