சி.எஸ்.அமுதனின் ‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு தொடக்கம்

Priya
878 Views
1 Min Read

சி.எஸ்.அமுதல் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவின் நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு இன்று (நவ.5) தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ்ப் படத்தின் முதல் இரண்டு பாகங்களை இணைந்து தயாரித்திருந்த ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தத் தகவலை பகிர்ந்து படத்தின் முதல் தோற்றத்தையும் வெளியிட்டுள்ளது. அதில் நடிகர் சிவா, வானத்தில் இருந்து இறங்கும் ஒரு பறக்கும் தட்டினைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார். அத்துடன் தலைப்புக்கு கீழ் ஏலியன் அத்தியாயம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் இன்னுமொரு சுவாரஸ்யமான விஷயமாக சிவாவுக்கு அகில உலக சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துக்கு பதிலாக விண்வெளி மண்டல (Intergalactic Superstar) சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் இடம்பெற்றுள்ளது.

ஏபி இன்டர்நேஷனல் மற்றும் ஒய் நாட் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சி.எஸ்.அமுதன் இயக்குகிறார். இதில் சிவாவுடன் அதுல்யா ரவி இணைந்து நடிக்க இருக்கிறார்.

கடந்த 2010-ம் ஆண்டு வெளியான ‘தமிழ்ப் படம்’ மூலமாக இயக்குநராக அறிமுகமானார் சி.எஸ்.அமுதன். மிர்ச்சி சிவா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்த அந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் வழக்கமான பாணிகளும், நடிகர்களின் செய்கைகளும் பகடி செய்யப்பட்டிருந்தது.

இந்தப் படம் ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து எட்டு ஆண்டுகள் கழித்து 2018-ல் சி.எஸ்.அமுதன் – சிவா கூட்டணி ‘தமிழ்ப் படம் 2’- வுடன் களமிறங்கியது.

இந்த முறை ஹாலிவுட் தொடர்கள், தமிழ் சினிமா போலீஸ் கதாபாத்திரங்களை பகடி செய்திருந்தனர். அடுத்த எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அதே கூட்டணி மீண்டும் கைகோக்க இருக்கிறது. இம்முறை பால்வெளியும், ஏலியன்களும் பகடிக்கு உள்ளாக்கப்படலாம் என்பதை படத்தின் முதல் தோற்றம் சுட்டிக்காட்டுகிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply