2030-க்குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்லும் ‘சுதேசி’ புல்லட் ரயில் தயாரிக்க மத்திய அரசு இலக்கு

Priya
732 Views
2 Min Read

வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் மணிக்கு 350 கி.மீ. வேகத்தில் செல்​லும் ‘சுதேசி’ புல்லட் ரயில்​களை தயாரிக்க மத்திய அரசு இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது.

மும்பை – அகம​தா​பாத் அதிவேக ரயில் திட்​டத்​தின் திருத்​தப்​பட்ட மதிப்​பீட்டை ரயில்வே அமைச்​சகம் தயாரித்​துள்​ளது. இதற்கு மத்திய அமைச்​சர​வை​யின் ஒப்​புதலைப் பெறு​வதற்​காக ரயில்வே அமைச்​சகம் சமர்ப்​பித்​துள்ள முன்​மொழி​வில், வரும் 2030-ம் ஆண்டுக்​குள் ஒரு மணி நேரத்​துக்கு 350 கி.மீ. வேகத்​தில் இயங்​கும் ‘பி35’ ரக சுதேசி புல்​லட் ரயில்​களை தயாரிக்க இந்​தியா இலக்கு நிர்​ண​யித்​துள்​ளது.

இதே 2030-ம் ஆண்​டில்​தான் ஜப்​பான் தனது அடுத்த தலை​முறை ‘ஈ10’ தொடர் புல்​லட் ரயில்​களின் உற்​பத்​தி​யைத் தொடங்​கத் திட்டமிட்​டுள்​ளது. இந்த ஈ10 ரயில்​களுக்கு நிக​ரானது இந்தியாவின் பி35 என்​பது குறிப்​பிடத்​தக்​கது. மும்பை – அகமதாபாத் இடையே​யான 508 கி.மீ. நீள அதிவேக ரயில் திட்டத்தின் திருத்​தப்​பட்ட செல​வாக ரூ.2 லட்​சம் கோடிக்​கும் அதிகமான தொகையை மத்​திய அமைச்​சரவை அங்கீகரித்துள்ளது. இது 2015-ல் திட்​ட​மிடப்​பட்ட ஆரம்ப மதிப்பீட்டை விட இரு​மடங்​காகும். இந்த கூடு​தல் செல​வான சுமார் ரூ.1 லட்​சம் கோடி மத்​திய அரசின் வரவுசெலவு ஆதரவு மூலம் பெறப்​படும்.

தற்​போது பயன்​பாட்​டில் உள்ள ‘ஈ5’ தொடர் ரயில்​களின் உற்​பத்தி படிப்​படி​யாக நிறுத்​தப்​படு​வ​தாக ஜப்​பான் தரப்​பில் 2024 டிசம்பரில் தெரிவிக்​கப்​பட்​டது. இதனையடுத்​து, ‘பி35’ ரக புல்​லட் ரயில்​களை உரு​வாக்​கும் பணியை இந்​தியா தொடங்​கியது. ஜப்பானின் ‘ஈ10’ ரயில்​கள் 2030-ல் உற்​பத்​தி​யைத் தொடங்கி 2034-ல் பயன்​பாட்​டுக்கு வரும் என்​ப​தால், அவை தயா​ரான பிறகு அவற்றை இந்​தி​யத் தடங்​களில் இயக்​கு​வது குறித்​துப் பரிசீலிக்கப்படும் என அதி​காரி​கள் தெரி​வித்​துள்​ளனர்.

இதனிடையே, மணிக்கு 280 கி.மீ. வேகத்​தில் செல்​லும் ‘பி28’ அதிவேக ரயில்​களை இந்​தி​யா​வில் தயாரிக்​கும் பணி ஏற்கெனவே தொடங்​கப்​பட்​டுள்​ளது. மேலும், சீனா தனது ரயில் அமைப்​பு​களில் பயன்​படுத்​தும் ‘சிடிசிஎஸ்’ சிக்​னலிங் முறைக்கு இணை​யாக, ரயில்​களின் வேகம், இடைவெளி மற்​றும் பாதுகாப்பைக் கையாள பாரத் ரயில் கட்​டுப்​பாட்டு அமைப்பை (பிசிசிஎஸ்) இந்​தியா உரு​வாக்கி வரு​கிறது.

மும்பை – அகம​தா​பாத் இடையே முழு​மை​யான 508 கி.மீ தூரத்துக்கான 350 கி.மீ. வேகத்​தில் செல்​லும் அதிவேக ரயில் பாதைப் பணி​கள் அனைத்​தை​யும் 2030 டிசம்​பருக்​குள்​ முடிக்​க இலக்​கு நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply