பிரிட்டனின் முதல் ஏஐ துறை அமைச்சராக இந்தியரான கனிஷ்கா நாராயண் நியமனம்

Priya
76 Views
1 Min Read

பிரிட்​டனில் முதல் முறை​யாக தனி​யாக உருவாக்கப்பட்டுள்ள செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) துறை அமைச்ச​ராக இந்​தி​யா​வில் பிறந்த கனிஷ்கா நாராயண் நியமிக்கப்​பட்​டுள்​ளார்.

பிரிட்​டனின் புதிய பிரதம​ராக​ ஆன்டி பர்ன்​ஹாம் நேற்று முன்தினம் பதவி​யேற்​றுக் கொண்​டார். இந்​நிலை​யில், இந்​திய வம்சாவளியைச் சேர்ந்த நாடாளு​மன்ற உறுப்​பினர் கனிஷ்கா நாராயணை நாட்​டின் முதல் பிரத்​யேக செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) துறை அமைச்​ச​ராக நியமித்​துள்​ளார். தனது அமைச்சரவையில் மேற்​கொண்​டுள்ள பரவலான மாற்​றங்​களின் ஒரு பகு​தி​யாக, இப்​ப​த​வியை அவர் கேபினட் நிலைக்கு உயர்த்தியுள்​ளார்.

முன்​ன​தாக, இணை​யப் பாது​காப்பு மற்​றும் ஏஐ துறை அமைச்​ச​ராகப் பணி​யாற்​றிய நாராயண், இனி கேபினட் அலு​வல​கம் மற்றும் வணிக மற்​றும் வர்த்​தகத் துறை​யில் இணைந்து பணியாற்றுவார். மேலும் இனி அவர் கேபினட் கூட்​டங்​களி​லும் கலந்து கொள்​வார்.

பிஹார் மாநிலம் முசாபர்​பூரில் பிறந்த கனிஷ்கா நாராயண், தனது சிறு​வயதை அம்​மாநிலத்​திலேயே கழித்​தார். பின்​னர் டெல்லிக்கு இடம்​பெயர்ந்​து, தனது 12-ம் வயதில் பிரிட்​டனின் வேல்ஸ் தலைநக​ரான கார்​டிஃப்​புக்கு குடிபெயர்ந்​தார். அவர் ஆக்ஸ்​போர்டு பல்​கலைக்​கழகத்​தில் தத்​து​வம், அரசி​யல் மற்​றும் பொருளா​தா​ரம் பயின்​றார். பிறகு, ஸ்டான்​போர்ட் பல்​கலைக்​கழகத்​தில் எம்​பிஐ பட்​டம் பெற்​றார்.

அரசி​யலில் நுழைவதற்கு முன்பு நாராயண் தனி​யார் மற்​றும் அரசுத் துறை​களில் பல்​வேறு பொறுப்​பு​களில் பணியாற்றியுள்ளார். 2024 பொதுத் தேர்​தலில், ‘வேல் ஆஃப் கிளமோர்​கன்’ தொகு​தி​யில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்​று எம்.பி.யானார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply