சுசீந்திரன் இயக்கத்தில் சீமான், சாந்தனு இணைந்து நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’

Priya
891 Views
1 Min Read

சுசீந்திரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் மற்றும் சீமான் இணைந்து நடிக்கும் ‘ஒரு கைதியின் டைரி’ படத்தின் மோஷன் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது.

கண்ணன் ரவி தயாரிக்கும் இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைக்கிறார். “ரௌத்திரம் பழகு, மானிடனே” என்ற பாரதியாரின் வரிகளோடு தொடங்கும் இந்த மோஷன் போஸ்டர் மதுரை நகரின் பின்னணி, 2001-ஆம் ஆண்டு காலகட்டத்து டைரி மற்றும் வரைபடக் குறிப்புகள், பதிவு அலுவலகத்திற்கு வெளியே நடக்கும் அரிவாள் வெட்டு, தூக்கு மேடை என க்ரைம் த்ரில்லர் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ளது.

இதில் சாந்தனு பாக்யராஜ் காவல்துறை அதிகாரியாகவும்], சீமான் மற்றொரு முதன்மைக் கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply