திரையுலகில் நடிகர் சூர்யா பல்வேறு போராட்டங்களைக் கடந்து வெற்றி பெற்றிருப்பதாக நடிகை ராதிகா சரத்குமார் தெரிவித்தார்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற விஸ்வநாத் அன்ட் சன்ஸ் திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய நடிகை ராதிகா, இப்படத்தில் சூர்யா மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளதாக பாராட்டினார்.
குறிப்பாக மனப்போராட்டங்களில் இருந்து தன்னைத் தானே வென்று வந்ததை நேரில் பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார். மேலும், இந்தப் படத்தில் சூர்யா மிகவும் அழகாகவும் சிறப்பாகவும் நடித்துள்ளதாக பாராட்டினார். இயக்குநர் வெங்கியுடன் இணைந்த படங்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும், மேலும், படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பும் வசூலும் மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்தைப் பார்த்து குழந்தைகள் ஆட்டம்போட்டது உணர்வுப்பூர்வமானது என நடிகை மமிதா பைஜூ தெரிவித்தார்.
இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பேசுகையில், சூர்யா தொடர்ந்து வெற்றிகளை பதிவு செய்து வருவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார். இயக்குநர் வெங்கி அட்லூரி பேசும்போது, தனது சொந்த மாநிலத்தில் கிடைக்கும் பாராட்டுகளைவிட, தமிழ்நாட்டு ரசிகர்கள் வழங்கிய பாராட்டு தன்னை மிகவும் நெகிழ வைத்ததாக தெரிவித்தார்.

