மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ டிச.4-ல் ரிலீஸ்

Priya
798 Views
1 Min Read

மணிகண்டன் நடிப்பில், சந்தோஷ் குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘மக்கள் காவலன்’ படம் டிசம்பர் 4 அன்று வெளியாகிறது.

‘ஜெய் பீம்’, ‘லவ்வர்’, ‘குடும்பஸ்தன்’ படங்களில் மூலம் ரசிகர்களிடம் பாராட்டை பெற்றவர் நடிகர் மணிகண்டன். ‘குடும்பஸ்தன்’ படத்துக்குப் பிறகு புதிய படங்களில் நடிக்காமல் இருந்து வந்த இவர், பா.ரஞ்சித் தயாரிப்பில் ‘மக்கள் காவலன்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார். தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

இது குறித்து நீலம் ஸ்டூடியோஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘புதிய சகாப்தம் தொடங்குகிறது.

உங்கள் நாள்காட்டியில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள், ‘மக்கள் காவலன்’ டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது’ என்று தெரிவித்துள்ளது. அத்துடன் ஒரு வீடியோவையும் பகிர்ந்துள்ளது. அதில் இயக்குநர்கள், நடிகர்கள், நண்பர்கள் என பலர் மணிகண்டனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

நீலம் ஸ்டூடியோஸ், பிர்லா ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘மக்கள் காவலன்’ படத்தை அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கி உள்ளார். படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணியை பார்தீபன் செல்வரத்னமும், படத்தொகுப்பு பணியை அருள் மோசஸும் மேற்கொண்டுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply