‘மண்டாடி’ சுஹாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘ஹைட் அண்ட் சில்க்’

Priya
589 Views
1 Min Read

‘மண்​டாடி’ படத்​தில் நெகட்​டிவ் கதா​பாத்​திரத்​தில் நடித்​துள்ள சுஹாஸ், ‘ஹைட் அண்ட் சில்க்’ படத்​தில் ஹீரோ​வாக நடிக்​கிறார். சஞ்​ச​னா, தணிகல பரணி, நந்​து, கருணாகரன் உள்​ளிட்​டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களில் நடித்​துள்​ளனர். கார்த்​திக் சுப்​பு​ராஜிடம் உதவி இயக்​குந​ராகப் பணி​யாற்​றிய ராஜேந்​திர பாலா எழுதி இயக்​கு​கிறார். இது, அவர் இயக்​குந​ராக அறி​முக​மாகும் திரைப்​படம். கார்த்​திக் பழனி ஒளிப்​ப​திவு செய்​கிறார். அம்​ரித் ராம்​நாத் இசை அமைக்​கிறார்.

தமிழ், மலை​யாள மொழிகளில் இது​வரை 18 திரைப்​படங்​களைத் தயாரித்​துள்ள ஸ்டோன் பெஞ்ச் ஸ்டூடியோ​வின் கார்த்​தி​கேயன் சந்​தானம் இப்​படம் மூலம் தெலுங்​குக்கு சென்​றுள்​ளார். தமிழ், தெலுங்​கில் உரு​வாகி​யுள்ள இப்​படத்தை வர்​திகா ஜெயினின் மிஸ்​ரிலால் பிக்​சர்ஸ் நிறு​வனத்​துடன் இணைந்து தயாரிக்​கிறார்.

இப்​படத்​தின் டைட்​டில் புரோமோ வெளி​யாகி​யுள்​ளது. அதில், பட்​டுப் புட​வை​களை நெய்​யும் நெச​வாளரின் வாழ்க்​கை​யும், நவீன காலத்​தைச் சேர்ந்த ஒரு பெண்​ணின் வாழ்க்​கை​யும் ஒன்​றோடொன்று சந்​திக்​கும் தருணம் காட்​சிப்​படுத்​தப்பட்​டுள்​ளது.

‘நெச​வாளர் புட​வையை உரு​வாக்​கிக் கொண்​டிருக்​கும்​போதே, அந்​தப் புடவை தனக்​குரிய பெண்​ணைத் தேர்ந்​தெடுக்​கிறது’ என்ற சுவாரஸிய​மான கருத்​துட​னும் முற்​றி​லும் மாறு​பட்ட இரு உலகங்​களைச் சேர்ந்​தவர்​களின் சந்​திப்​பும் என இந்த புரமோ டீஸர் வரவேற்​பைப் பெற்று வரு​கிறது.

Share This Article
Leave a Comment

Leave a Reply