‘துரந்தர்’ போல தாக்கம் நிச்சயம் – ‘அரசன்’ குறித்து சிம்பு நம்பிக்கை

Priya
703 Views
2 Min Read

‘‘இந்தப் பொங்கலுக்கு ‘அரசன்’ படம் ரிலீஸ் ஆகாது. ஆனால், ரசிகர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிச்சயம் நான் காப்பாற்றுவேன்’’ என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்து உள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் படம் ‘அரசன்’. இந்தப் படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கி வேகமாக நடந்துவரும் நிலையில், படத்தின் வெளியீடு பற்றி சிலம்பரசன் தகவல் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிலம்பரசன், ‘‘‘துரந்தர்’ படம் எப்படி இந்திய திரையுலகில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி திரும்பி பார்க்க வைத்ததோ, அதேபோல தமிழ் சினிமாவை இந்தப் படம் திரும்பிப் பார்க்க வைக்கும்.

உங்கள் எல்லோருக்கும் வெற்றிமாறனை பற்றித் தெரியும். அவர் எல்லா விஷயமும் முழுமையாக இருக்க வேண்டும் என்று நினைப்பார். அரசன் படத்தை இன்னும் கொஞ்சம் சுருக்கி, டைட் பண்ணிக் கொண்டு வரலாம். அப்படிக் கொண்டுவந்தால் அது ரொம்பத் தப்பாகி விடும். படத்தின் தரத்தையும் அது பாதிக்கும்.

ஒரு நல்லப் படத்தைச் சரியாக கொடுக்க வேண்டும் என்று வேலை செய்து கொண்டிருக்கிறோம். அதனால் 2027 பொங்கலுக்கு ‘அரசன்’ படம் வெளியாகவில்லை.

ரசிகர்களுக்கு இது வருத்தமான விஷயம்தான். ஆனால் நீங்கள் எல்லோரும் பெருமைப்படும்படி ஒரு படத்தைக் கொடுப்பேன் என நான் உங்களுக்கு வாக்குக் கொடுத்திருந்தேன். அதைக் காப்பாற்றும் விதமாக ‘அரசன்’ படம் கண்டிப்பாக சம்பவம் பண்ணும்.

அதற்கு முன்பாக, ரசிகர்களுக்காக, ‘தி வேர்ல்ட் ஆஃப் அரசன்’ என்ற ஒரு வீடியோ திரையரங்குகளில் இந்த தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இதுவரை எடுக்கப்பட்ட படத்தின் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோ, வெற்றிமாறன் உருவாக்கியுள்ள ‘அரசன்’ படத்தின் உலகத்தைப் பற்றி விளக்கும் விதமாக இருக்கும்’’ என்று சிம்பு தெரிவித்தார்.

வெற்றிமாறன் இயக்​கத்​தில் சிலம்பரசன் நாயகனாக நடித்து வரும் ‘அரசன்’ படம் ‘வடசென்​னை’ சினி​மாடிக் யுனிவர்​ஸாக உருவாகி வருகிறது. அமீர், சமுத்​திரக்​க​னி, கிஷோர், ஆண்ட்​ரியா உள்ளிட்​டோர் நடிக்கும் இந்தப் படத்தில், இதில் விஜய் சேதுபதி முக்​கிய கதா​பாத்​திரத்​தில் நடிக்​கிறார். அனிருத் இசையமைக்​கும் இப்​படத்தை வி கிரியேஷன்ஸ் சார்​பில் கலைப்​புலி எஸ்​.​தாணு தயாரிக்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply