சந்தானத்தின் அடுத்த படத் தலைப்பு ‘அதிசய பிறவி’

Priya
660 Views
1 Min Read

சந்தானத்தின் நடிப்பில் உருவாகி இருக்கும் புதிய படத்துக்கு ‘அதிசய பிறவி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் சுதாமன் கிருஷ்ணா இயக்கத்தில் சந்தானம் ஒரு படத்தில் நடித்து வந்தார். தலைப்பிடப்படாமல் இருந்த அவரது 20-வது படமான அதன் படப்பிடிப்பு திங்கள்கிழமை (அக்.19) நிறைவடைந்தது.

இந்த நிலையில் படத்தின் தலைப்பையும், முதல் தோற்றத்தையும் படக்குழு இன்று (அக்.20) வெளியிட்டுள்ளது.

இந்தத் தகவலை வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட், அதன் சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில், ‘அதிசய பிறவி’ சந்தானத்தின் அடுத்த படத்தின் முதல் தோற்றம் மற்றும் தலைப்பை வெளியிடுகிறோம்.

அசாதாரணமான ஒரு பயணத்துக்கு தயாராகுங்கள், இங்கே ஒவ்வொரு நொடிகளும் அனைத்தும் மாறும்’ எனக் கூறி, படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டுள்ளது.

வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட், கே7 ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சந்தானத்துடன், நாயகியாக கோபிகா ரமேஷ் நடிக்கிறார். ரிச்சட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்யும் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply