30 நாட்கள் காட்டுக்குள் படமான ‘ஒட்டாரம்’!

Priya
677 Views
1 Min Read

காட்வின் ஃப்ராங்க், ‘யாத்திசை’ ராஜலட்சுமி நடித்துள்ள திரைப்படம் ‘ஒட்டாரம்’. ரா. ராமமூர்த்தி எழுதி இயக்கியுள்ள திரைப்படத்தில் டி.எஸ்.கே, ரோபோ கணேசன், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, மூணார் ரமேஷ் என பலர் நடித்துள்ளனர். சி. சத்யா இசையமைத்துள்ள இப்படத்துக்கு எம்.எஸ்.பரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மான்குத்திமேடு வனப்பகுதியில் அரங்கு அமைத்து 30 நாட்களுக்கு மேல் பனிப்பொழிவுக்கு நடுவே படமாக்கப்பட்டுள்ளன. இப்படம் பற்றி இயக்குநர் ரா. ராமமூர்த்தி கூறும்போது, ‘‘இது கண்டிப்பாக விசித்திரமான அனுபவத்தை பார்வையாளர்களுக்குத் தரும் படமாக இருக்கும்.

சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் துன்புறுத்தலின் வலியையும், அது குறித்த விழிப்புணர்வையும் அடிப்படையாகக் கொண்ட கதை இது. ஒரு தனிமனிதன் தனது வாழ்வியல் சுதந்திரத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறான் என்பது பற்றிய கருத்துகளை இப்படம் காட்சிப்படுத்துகிறது” என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply