‘ஜனநாயகன்’ ஜூலை 23-ல் ரிலீஸ்: அதிகாரபூர்வ அறிவிப்பு

Priya
13 Views
1 Min Read

தமிழக முதல்வர் விஜய் நடித்​துள்ள ‘ஜனநாயகன்’ இம்மாதம் 23-ம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக முதல்​வர் விஜய் நடித்​துள்ள ‘ஜன​நாயகன்’ திரைப்​படத்தை ஹெச். வினோத் இயக்​கி​யுள்​ளார். இதில் பூஜா ஹெக்​டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிர​காஷ் ராஜ் என பலர் நடித்​துள்​ளனர். இந்தப் ​படத்​துக்கு தணிக்​கைச் சான்றிதழ் கிடைப்​ப​தில் ஏற்​பட்ட சிக்​கல் காரண​மாக படம் வெளி​யா​வதில் தாமதம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், தணிக்கை வாரி​யம் ‘ஏ’ சான்​றிதழ் அளித்​துள்​ளது. இந்நிலையில், இப்​படம் ஜூலை 23-ல் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறு​வன​மான கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply