E-100 எனப்படும் 100 சதவீதம் எத்தனால் ஏரிபொருளால் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் 1989-ம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளில், ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் திருத்தங்களை மேற்கொண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
E-85 மற்றும் E-100 ஆகிய எத்தனால் எரிபொருட்கள் பயன்படுத்தி இயங்கும் வாகனங்களுக்கான மாசுகட்டுப்பாட்டு விதிகள், எரிபொருள் விவர குறிப்புகள் மற்றும் பரிசோதனை நடைமுறைகள் சட்டப்பூர்வமாக சேர்க்கப்பட்டுள்ளன.
சாதாரண பெட்ரோல் கார்களிலோ அல்லது E-20 வரை இயங்க கூடிய கார்களிலோ E -100 எரிபொருளை பயன்படுத்த முடியாது என அமைச்சகம் திட்டவட்டமாக தெளிவுப்படுத்தி உள்ளது.20 சதவீதத்திற்கு மேற்பட்ட எத்தனால் கலந்த எரிபொருட்கள் அதற்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட சான்றளிக்கப்பட்ட Flex -Fuel வாகனங்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்.
ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள பெட்ரோல் கார்கள் என்ஜின்களை மாற்றாமல் E-100 எரிபொருளை பயன்படுத்த முடியாது. கடந்த ஜூன் மாதம் மாருதிசுசுகி நிறுவனம் E -20 முதல் E-100 வரையிலான எத்தனால் கலவையில் இயங்க கூடிய WAGONAR Flex -Fuel காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தி இருந்த நிலையில் தற்போது முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களான.மாருதி சுசுகி ,டொயோட்டா ,டாடா மோட்டர் ,மற்றும் ஹோண்டா ஆகிய நிறுவனங்கள், E-100 எரிபொருளில் இயங்கும் Flex Fuel மாடல்களில் உருவாக்கும் பணிகளை தீவிரப்படுத்தி உள்ளன.
E-100 எரிபொருளில் இயங்கும் வாகனங்களை பயன்படுத்தினால் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எத்தனாலை அதிகமாக பயன்படுத்த முடியும் .இந்தியாவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செலவை கணிசமாக குறைக்க முடியும்.
அதுமட்டும் இல்லாமல் E-100 வாகனங்களை பயன்படுத்துவதால் சுற்றுசூழலுக்கு கேடு விளைவிக்கும் வாகன புகை உமிழ்வை குறைப்பதோடு கரும்பு ,மற்றும் விவசாய கழிவுகளில் இருந்து எத்தனால் தயரிக்கும் இந்திய விவசாயிகளின் வருமானத்தையும் கணிசமாக உயர்த்தும்.

