இத்தாலி பிரதமர் மெலோனி உடன் டாடா சன்ஸ் தலை​வர் சந்திப்பு

Priya
752 Views
2 Min Read

இத்தாலி​யின் ஐவெகோ நிறு​வனத்தை கையகப்படுத்தியதைத் தொடர்ந்​து, டாடா சன்ஸ் தலை​வர் என். சந்​திரசேகரன் அந்​நாட்டு பிரதமர் மெலோனியை சந்​தித்து பேசினார்.

டாடா மோட்​டார்ஸ் நிறு​வனம் இத்​தாலி​யின் பிரபல வணிக வாகன தயாரிப்பு நிறு​வன​மான ஐவெகோ குழு​மத்தை 4.3 பில்லியன் டாலர் (சு​மார் ரூ.36,300 கோடி) மதிப்​பிலான மெகா ஒப்பந்​தம் மூலம் அதி​காரப்​பூர்​வ​மாகத் தன்​வசப்​படுத்​தி​யுள்​ளது. 2008-ம் ஆண்​டில் ஃபோர்டு நிறு​வனத்​திட​மிருந்து ஜாகு​வார் லேண்ட் ரோவர் பிராண்​டு​களை வாங்​கியதற்கு பிறகு, டாடா​வின் மிகப்​பெரிய சர்​வ​தேச ஆட்​டோமொபைல் ஒப்​பந்​தம் இது​வாகும். இதன் மூலம் ஐவெகோ நிறு​வனம் டாடா மோட்​டார்​ஸின் துணை நிறு​வன​மாக மாறி​யுள்​ளது.

இத்​தாலி​யின் டுரின் நகரில் உள்ள ஐவெகோ தலை​மையகத்​தில் கடந்த செவ்​வாய்க்​கிழமை நடை​பெற்ற உலகளா​விய பத்திரிகையாளர் சந்​திப்​பில் பேசிய டாடா சன்ஸ் தலை​வர் என். சந்​திரசேகரன், ஐவெகோ நிறு​வனத்தை டாடா மோட்​டார்ஸ் கையகப்​படுத்​தி​யதை அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தார்.

அதனை தொடர்ந்து பேசிய அவர், “மிக​வும் வலு​வான இத்​தாலிய வேர்​களை​யும், ஐரோப்பா மற்​றும் லத்​தீன் அமெரிக்கா முழு​வதும் வலு​வான இருப்​பை​யும் கொண்ட ஐவெகோ குழு​மம், லாரி​கள், பேருந்​துகள் மற்​றும் பவர் டிரெய்ன்​கள் ஆகிய​வற்​றில் மிகப்​பெரிய தொழில்​துறை பாரம்​பரி​யம், புகழ்​பெற்ற பிராண்​டு​கள், தொழில்​நுட்​பம் மற்​றும் உலகத் தரம் வாய்ந்த திறன்​களைக் கொண்​டுள்​ளது.

இந்​நிறு​வனத்தை கையகப்​படுத்​தும் செயல்​முறை முழு​வதும் ஊக்​கமளித்து ஆதர​வளித்த இத்​தாலிய அரசுக்​கும், பிரதமர் ஜார்​ஜியா மெலோனி மற்​றும் தொழில் துறை அமைச்​சர் அடோல்போ உர்சோ ஆகியோ​ருக்​கும் நன்றி தெரிவித்துக் கொள்​கிறேன்” என்​றார்.

இதனையடுத்து இரு நிறு​வனங்​களும் இணைந்து வெளி​யிட்ட கூட்டறிக்​கை​யில், “இரு நிறு​வனங்​களின் ஒருங்​கிணைந்த வருவாய் சுமார் ரூ. 2,28,000 கோடி​யாக உள்​ளது. கையகப்படுத்தும் செயல்​முறை தொடர்ந்து நடை​பெற்று வருகிறது, தற்​போது இரு நிறு​வனங்​களும் ஒருங்​கிணைப்பு மற்றும் கூட்டு திட்​ட​மிடலின் அடுத்த கட்​டத்​துக்கு நகர்​கின்​றன” என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

ஐவெகோ நிறு​வனத்தை கையகப்​படுத்​திய நிலை​யில், டாடா சன்ஸ் தலை​வர் என். சந்​திரசேகரன் நேற்று முன்​தினம் இத்​தாலி தலைநகர் ரோமில் பிரதமர் ஜார்​ஜியா மெலோனியை சந்​தித்​துப் பேசி​னார்.

பிரதமரின் அதி​காரப்​பூர்வ இல்​ல​மான பலாஸ்ஸோ சிகி​யில் நடை​பெற்ற இந்த சந்​திப்​பின்​போது, ஐவெகோ நிறு​வனத்தை கையகப்​படுத்​தும் டாடா குழு​மத்​தின் முழு செயல்​திட்​டத்​தை​யும் ஜார்​ஜியா மெலோனி​யிடம் அவர் விளக்​கி​னார். இந்​தி​யா​வுக்​கும் இத்​தாலிக்​கும் இடையி​லான தொழில் மற்​றும் பொருளா​தார உறவு​கள் வலுப்​பெற்று வரும் நிலை​யில் இந்த சந்​திப்பு நடை​பெற்​றது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply