பசுமை வழிச் சாலையில் புதுப்பிக்கப்பட்ட முகாம் இல்லத்தில் குடியேறிய முதல்வர்

Priya
606 Views
1 Min Read

பசுமைவழிச் சாலை​யில் முதல்​வரின் முகாம் இல்​லமாக புதுப்​பிக்​கப்​பட்ட பாமணி இல்​லத்​தில் முதல்​வர் விஜய் நேற்று முதல் குடியேறிய​தாக தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

முதல்​வர் விஜய், நீலாங்​கரையில் உள்ள தனது இல்​லத்​தில் இருந்து தலை​மைச் செயல​கத்​துக்​குச் சென்று வரு​வ​தால், தினமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்​டியுள்​ளது.

இந்த நிலை​யில், பயண நேரத்​தைக் குறைக்​கவும், பாது​காப்​புப் பணி​யில் காவல் துறைக்கு ஏற்​படும் சிரமங்​களைக் குறைக்​கவும் டிஜிஎஸ் தினகரன் சாலை​யில் பொதிகை வளாகத்​தில் உள்ள பாமணி இல்​லம் முதல்​வரின் முகாம் அலு​வல​க​மாக சமீபத்​தில் புதுப்​பிக்​கப்​பட்​டது.

இந்த அலு​வல​கத்​தில் முதல்​வருக்​கென தனி அலு​வலக அறை, தனிச் செயலர்​கள் மற்​றும் அலு​வல​கப் பணி​யாளர்​கள் பணி​யாற்​று​வதற்​குத் தனித்​தனி அறைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. அதி​காரி​கள், முக்​கியப் பிர​முகர்​களு​டன் ஆலோ​சனை நடத்த கூட்ட அரங்​கமும் தயார் செய்​யப்​பட்​டுள்​ளது.

புதுப்​பிப்பு பணிகள் முடிவடைந்​ததைத் தொடர்ந்து, முதல்​வர் விஜய் நேற்று முதல் அங்கு குடியேறிய​தாக தகவல்​கள் வெளியாகி​யுள்​ளன.

பாமணி இல்​லத்​தின் பெயர் ‘வெற்றி இல்​லம்’ என மாற்​றப்​பட உள்​ள​தாக கூறப்​படு​கிறது. இதே பகுதி​யிலேயே அமைச்​சர்​கள் சிலரின் இல்​லங்​களும் அமைந்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply