தனியார்மயமாக்குவதற்கு பதிலாக இஸ்ரோவை வலுப்படுத்த வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

Priya
13 Views
1 Min Read

இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் வெளி​யிட்ட அறிக்​கை​: இந்​திய விண்​வெளி ஆராய்ச்சி நிறு​வனம் என்​விஎஸ்-03 செயற்​கைக்​கோளு​டன் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்​கெட்டை வெற்​றிகர​மாக விண்​ணில் செலுத்​தி​யுள்​ளது.

உள்​நாட்​டிலேயே தயாரிக்​கப்​பட்ட அணுக் கடிகாரம் மற்​றும் மேம்​படுத்​தப்​பட்ட திறன்​களு​டன் என்​விஎஸ்-03 செயற்​கைக்​கோள் ஜிஎஸ்எல்வி-எஃப்18 ராக்​கெட் மூலம் நிலைநிறுத்​தப்​பட்​டது இஸ்ரோவின் மகத்​தான சாதனையாகும்.

இதில் உள்ள நேவிக் அமைப்பு நாட்​டின் ரயில்​கள், வாக​னங்​கள் மற்​றும் கப்​பல்​களை நேரலை​யில் கண்​காணிக்​கும் பொது பயன்​பாடுகளுக்கு உதவுவதுடன், இந்​தியா மற்​றும் அதை சுற்​றியுள்ள 1500 கிமீ பரப்​பளவுக்கு வழிகாட்​டுதல் சேவையையும் வழங்​கும் வகை​யில் உரு​வாக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த மகத்​தான சாதனையை நிகழ்த்​திய இஸ்ரோ தலை​மைக்​கும், விஞ்​ஞானிகளுக்​கும், தொழில்​நுட்ப நிபுணர்​களுக்​கும் வாழ்த்​துகளை​யும் பாராட்​டுகளை​யும் தெரி​வித்து கொள்​கிறோம்.

விண்​வெளி ஆராய்ச்​சிக்கு வித்​திட்ட இந்​தி​யாவின் முன்​னாள் பிரதமர் ஜவஹர்​லால் நேரு, இஸ்ரோவை உரு​வாக்​கு​வதிலும் வளர்த்​தெடுப்​ப​திலும் மகத்​தான பங்கை செலுத்​திய விஞ்​ஞானிகள் விக்​ரம் சாரா​பாய், அப்​துல் கலாம் போன்​றோரின் கனவு​கள் மெய்ப்​பட்டு வரு​கின்​றன.

இந்​நிலை​யில் விண்​வெளி ஆராய்ச்​சி​யையும், ராக்​கெட் ஏவுதலை​யும் இந்​திய அரசு தனியார் மய​மாக்​கு​வது கண்​டனத்​துக்​குரியது. இதற்கு பதிலாக இஸ்ரோவை மேலும் வலுப்​படுத்த வேண்​டும். இஸ்ரோவுக்கு தேவை​யான நிதி உதவி உட்​பட அனைத்து உதவி​களை​யும் மத்​திய அரசு செய்ய முன்​வர வேண்​டும். இவ்​வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply