பழைய சாலைகளின் மேற்பரப்பை நீக்காமல் புதிய தார் சாலைகள் அமைத்தால் அதிகாரிகள் மீது நடவடிக்கை: சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை

Priya
717 Views
1 Min Read

மாநக​ராட்சி பகு​தி​களில் பழைய சாலைகளின் மேற்​பரப்பை அகழ்ந்​தெடுக்​காமல் புதிய தார் சாலைகளை அமைத்​தால், தொடர்​புடைய அதி​காரி​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும் என்று மாநக​ராட்சி ஆணை​யர் சமீரன் தெரி​வித்​துள்​ளார்.

இது தொடர்​பாக அவர் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: சென்னை மாநக​ராட்​சிப் பகு​தி​களில், முதல்​வரின் ஒருங்​கிணைந்த நகர்ப்​புற மேம்​பாட்டு இயக்க திட்​டத்​தின் கீழ் ரூ.300 கோடி​யில் சாலைகளில் மேம்​பாட்​டுப் பணி​களை மேற்​கொள்ள 110 விதி​யின் கீழ் அறி​வித்து இருந்​தார்.

முதற்​கட்​ட​மாக ரூ.154.16 கோடி மதிப்​பீட்​டில் விரி​வான திட்ட அறிக்கை தயாரிக்​கப்​பட்​டு, அதில் கண்​காணிப்​புக் குழு​வின் பரிந்​துரை​யின்​படி முதற்​கட்​ட​மாக ரூ.130.19 கோடி​யில் சாலைப்​பணி​கள் மேற்​கொள்ள அனு​மதி பெறப்​பட்டு ஒப்​பந்​தப் புள்​ளி​கள் கோரப்​பட்​டுள்​ளன.

ஒப்​பந்​தப்​புள்ளி நடவடிக்​கைகள் முடிவுற்று சாலைப் பணி​கள் மேற்​கொள்​ளும்​போது தரமாக​வும், அளவீடு​கள் சரி​யாக​வும் அமைப்​பது குறித்து மாநக​ராட்சி ஆணை​யர் வழி​காட்டு நெறி​முறை​கள் வழங்கி அலு​வலர்​களுக்கு அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

அதன்​படி, தார்ச்​சாலைகள் மேம்​படுத்​தும் பணி​கள் மேற்​கொள்​ளும் போது ஏற்​கெனவே உள்ள சாலைகளின் மேற்​பரப்​பின் பழைய தார் அடுக்கை முழு​வதும் அகழ்ந்​தெடுத்​து, புதி​தாக தார்ச் சாலைகளை அமைக்க வேண்​டும்.

சாலை​யில் புதி​தாக எவ்​வளவு கனத்​தில் தார்ச்சாலை அமைக்​கப்​படு​கிறதோ அதே அளவுக்கு அகழ்ந்​தெடுக்​கும் பணி​யும் மேற்​கொள்​ளப்பட வேண்​டும்.

இதனால் ஏற்​க​னவே சாலை எந்த அளவு உயர​மாக உள்​ளதோ புதிய தார்ச்​சாலை அமைத்த பிறகும் அதே உயரம் பராமரிக்​கப்​படும்.

சிறப்பு இயந்​திரத்​தால் அகழ்ந்​தெடுக்க முடி​யாத ஓரப் பகு​தி​களில் வேறு இயந்​திரங்​கள் அல்​லது பணி​யாளர்​களால் நேரடி​யாக அகற்​றப்பட வேண்​டும். இதனால் கட்​டிடங்​கள் சாலை மட்​டத்​திற்கு கீழ் செல்​வதை தவிர்க்க முடி​யும்.

பழைய சாலைகளில் சரி​யாக அகழ்ந்​தெடுக்​கும் பணி மேற்​கொள்​ளாமல் புதிய தார்ச் சாலை அமைத்​தால், பணி மேற்​கொண்ட சம்​பந்​தப்​பட்ட அலு​வலர்​கள் மற்​றும் ஒப்​பந்​த​தா​ரர்​கள் மீது கடும் நடவடிக்கை மேற்​கொள்​ளப்​படும். இவ்​வாறு செய்​திக்​குறிப்​பில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply