பாக். பெண் உளவாளியிடம் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட இந்திய கடற்படை மாலுமி கோவையில் கைது

Priya
862 Views
1 Min Read

பாகிஸ்தானைச் சேர்ந்த பெண் உளவுத்​துறை அதிகாரிக்​கு, ரகசியத் தகவலை கசி​ய​விட்​ட​தாக இந்​திய கடற்​படை மாலுமி கோவை​யில் கைது செய்​யப்​பட்​டார்.

மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த பிரதீப் முகர்ஜி (31), இந்​தி​யக் கடற்​படை​யில் விசாகப்​பட்​டினத்தை தளமாகக் கொண்ட கிழக்கு கடற்​படை​யில் மாலுமி​யாகப் பணி​யாற்றி வரு​கிறார். கோவை ரெட்ஃபீல்ட் பகு​தியில் உள்ள இந்​திய கடற்​படை பயிற்சி மைய​மான ஐஎன்​எஸ் அக்​ரானி​யில் நடை​பெறும் மேலாண்மை மேம்​பாட்​டுப் பயிற்சி முகாமில் கடந்த ஒரு வார​மாக தங்கி பிரதீப் முகர்ஜி பயிற்சி பெற்​றார்.

இந்​நிலை​யில், ஆந்​திர காவல் துறை​யில் பயங்கர​வாதக் குழுக்​கள், எல்லை தாண்​டிய உளவு மற்​றும் உயர் பாது​காப்பு அச்​சுறுத்தல்​களை விசா​ரிக்​கும் சிறப்பு உளவுப் பிரிவு போலீ​ஸார் இருதினங்​களுக்கு முன் கோவைக்கு வந்து இவரை கைது செய்தனர்.

இது தொடர்​பாக போலீ​ஸார் கூறியதாவது: பாகிஸ்​தானைச் சேர்ந்த பெண் உளவுத்​ துறை அதி​காரிக்​கு, இந்​திய கடற்​படை​யின் ரகசிய பாது காப்​புத் தகவல்களை பிரதீப் முகர்ஜி கசிய விட்​டிருப்​பது சிறப்பு உளவு பிரிவினருக்கு முதல்​கட்​ட​மாக தெரிய​வந்​துள்​ளது.

மேலும், சமூக ஊடகங்​களில் பாகிஸ்​தானிய பெண் உளவாளி​யிடம், விசாகப்​பட்​டினம் கடற்​படைத் தளத்​துடன் தொடர்​புடைய தகவல்​களை பகிர்ந்​ததும் உறு​திப்​படுத்​தப்​பட்​டது. இதையடுத்​து, ஆந்​திர சிறப்பு பிரிவு போலீ​ஸார், பிரதீப் முகர்ஜிகுறித்த தகவல்​களை தெரி​வித்து கைது செய்ய இந்​திய கடற்​படை அதி​காரி​களிடம் அனு​மதி பெற்​றனர்.

தொடர்ந்​து, ஆந்​தி​ரா​வில் இருந்து கோவைக்கு வந்த சிறப்புக் குழு, பிரதீப் முகர்​ஜியை கைது செய்​தனர். அவரை கோவை நீதி​மன்​றத்​தில் ஆஜர்​படுத்​தி, விஜய​வா​டாவுக்​கு அழைத்​துச்​ சென்​றனர். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply