முதல்வர் வெறும் சினிமா வசனங்களை மட்டுமே பேசுகிறார்; பாஜகவும் திமுகவும் என்றுமே எதிரி கட்சிகள் – நயினார் நாகேந்திரன்

Priya
695 Views
1 Min Read

முதல்வர் விஜய் வெறும் சினிமா வசனங்​களை மட்​டுமே பேசுகிறார் என்​றும், பாஜக​வும் திமுக​வும் என்​றுமே எதிரி கட்​சிகள்​தான் எனவும் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​தார்.

பிரதமர் மோடி​யின் 76-வது பிறந்​த​நாள் விழா நாடு முழு​வதும் ஒரு மாதம் கொண்​டாடப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில், அவரது பிறந்​த​நாளை முன்​னிட்டு தமிழக பாஜக சார்​பில் 576 இருசக்கர வாகன ஓட்​டிகளுக்கு இலவச தலைக்​கவச​மும், 300 தூய்மை பணி​யாளர்​கள் மற்​றும் பெண்​களுக்கு புடவை உள்​ளிட்ட நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் நிகழ்ச்சி சென்னை பால​வாக்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இந்த நிகழ்ச்​சிக்கு மாநில செய​லா​ளர் சதீஷ்கு​மார் தலைமை தாங்​கி​னார். மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் சிறப்பு விருந்​தின​ராக கலந்து கொண்டு பொது​மக்​களுக்கு நலத்​திட்ட உதவி​களை வழங்​கி​னார்.

இதையடுத்து செய்​தி​யாளர்​களிடம் நயி​னார் நாகேந்​திரன் கூறிய​தாவது: கரூர் சம்​பவம் நடை​பெற்று ஓராண்டு ஆகிறது. இதில் யாரெல்​லாம் குற்​ற​வாளி​களோ அவர்​கள் அனை​வரும் தண்​டிக்​கப்பட வேண்​டும்.

மது​ராந்​தகம், தாராபுரம் இடைத்​தேர்​தலில் எங்​கள் கூட்​டணி நிச்​ச​யம் வெற்றி பெறும். திமுக​வும், பாஜக​வும் வேறு வேறில்லை என முதல்​வர் சொல்​கிறார். பாஜக​வுக்​கும், திமுக​வுக்​கும் கொள்கை அளவில் எந்​த​வித உடன்​பாடும் இருந்​தது இல்​லை.

1999-ல் மட்​டும் ஒரு முறை உடன்​பாடு ஏற்​பட்​டிருக்​கிறது. அதன்​பிறகு இன்று வரை பாஜக​வும், திமுக​வும் எதிர்​கட்​சிகள் மட்​டும் அல்ல, எதிரி கட்​சிகளாக தான் இருந்து கொண்​டிருக்​கிறோம்.

முதல்​வர் விஜய்க்கு என்ன பேச வேண்​டும் என்​பதே தெரிய​வில்​லை. சினிமா சூட்​டிங் வசனத்தை சட்​டப்​பேர​வை​யிலும் பேசுகிறார், பிரச்​சா​ரத்​தி​லும் பேசுகிறார். தமிழகத்​தில் நாள்​தோறும் கொலை, பாலியல் சம்​பவங்​கள் நடை​பெறுகிறது. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

Share This Article
Leave a Comment

Leave a Reply