‘வீ த லீடர்ஸ்’ இயக்கத்தின் சார்பில் அறியப்படாத சாதனை பெண்களுக்கு ‘காமராஜர் விருது’ வழங்கும் விழா அண்ணாமலை தலைமையில் சென்னையில் அக்.2-ம் தேதி நடக்கிறது.
அண்ணாமலை தொடங்கியுள்ள ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பு, மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட சமூகப் பிரச்சினையை மையமாகக் கொண்டு விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, வெளிச்சத்துக்கு வராத, எளிமை, நேர்மை மற்றும் மக்கள் தொண்டில் சிறந்து விளங்கும் அறியப்படாத சாதனை பெண்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ‘காமராஜர் விருது’ வழங்கி கவுரவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

