‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்’ என்ற அரசினர் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் வெற்றிகரமாக நிறைவேற்றப் பட்டதற்கு முதல்வர் விஜய் நன்றியும், வாழ்த்தும் தெரிவித் துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் வலைதளப் பதிவில் கூறியுள்ளதாவது: தமிழ் ஒரு மொழி மட்டுமல்ல, அது ஒரு சிந்தனை, பண்பாடு, நாகரிகம். அத்துடன், தமிழ் நம் உயிர், நம் உணர்வு என்பதை இந்த அரசு முழுமையாக உணர்ந்துள்ளது.
தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதை ஆகும்.
வரலாற்றில் நிலைத்திருக்கும்
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்த நாள் தமிழகத்தின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்ததற்காக எனது மனமார்ந்த நன்றி.
உலகெங்கும் தமிழ்த் தாயின் புகழ் ஓங்கட்டும். தமிழகத்தின் வெற்றிப் பயணம் தொடரட்டும். இவ்வாறு முதல்வர் தெரி வித்துள்ளார்.

