தமிழக வனத்துறை தலைவராக ஏ.உதயன் பொறுப்பேற்பு

Priya
684 Views
1 Min Read

தமிழக வனத்துறை தலை​வ​ராக ஏ.உதயன் நேற்று பொறுப்​பேற்​றுக்​கொண்​டார். வனத்​துறை தலை​வ​ராக இருந்த ஸ்ரீநி​வாஸ் ரெட்டி நேற்று ஓய்​வு​பெற்​றார்.

அதனைத் தொடர்ந்​து, வண்​டலூரில் உள்ள உயர்​நிலை வன உயி​ரின பாது​காப்பு நிறுவன இயக்​குந​ராக இருந்த முதன்மை தலைமை வனப்​பாது​காவலர் ஏ.உதயன் வனத்​துறை தலை​வ​ராக நேற்று பொறுப்​பேற்​றுக்​கொண்​டார்.

சுற்​றுச்​சூழல் அறி​வியலில் முதுகலை பட்​டம் பெற்ற இவர், 1991-ம் ஆண்டு பேட்ச், தமிழக கேடர் இந்​திய வனப்​பணி அதி​காரி​யா​வார். திருப்​பத்​தூர் மாவட்ட வன அலு​வலர், தமிழ்​நாடு பல்​லு​யிர் பரவல் வாரிய உறுப்​பினர் செயலர், மாசுக்​கட்​டுப்​பாடு வாரிய தலை​வர் உள்​ளிட்ட பல்​வேறு பதவி​களை வகித்​துள்​ளார்.

பாம்பு பிடிக்க பயிற்சி

தமிழக வனத்​துறை​யில் பாம்பு பிடிக்​கும் ஆபத்​தான பணியை மேற்​கொள்​வோரை அரசு ஊழியர்​களாக நியமிக்​க​வில்​லை. வனத்​துறை​யில் ஒப்​பந்த அடிப்​படை​யில் நியமிக்​கப்​பட்​டிருந்​தனர்.

குறிப்​பாக இதில் அனுபவம் பெற்ற பழங்​குடி​யின மக்​களை நியமித்​து, அவர்​களுக்கு வேலை​வாய்ப்​பை​யும் அரசு ஏற்​படுத்தி கொடுத்​தது. இதற்​கிடை​யில் பொது​மக்​கள் அளிக்​கும் புகார் அடிப்​படை​யில் தீயணைப்பு வீரர்​களும், குடி​யிருப்பு பகு​தி​களில் நுழை​யும் பாம்​பு​களைப் பிடித்து வனத்​துறை​யிடம் ஒப்​படைத்து வந்​தனர்.

உரிய அனுபவ​மும், கருவி​களும் இல்​லாத தீயணைப்பு வீரர்​களை பாம்பு பிடிக்​கும் பணி​யில் ஈடு​படுத்​தக்​கூ​டாது என சமூக ஆர்​வலர்​கள் மத்​தி​யில் எதிர்ப்பு எழுந்​தது.

இதையடுத்​து, உயர்​நிலை வன உயி​ரின பாது​காப்பு நிறுவன இயக்​குந​ராக இருந்த உதயன், தமிழகம் முழு​வதும் 50-க்​கும் மேற்​பட்ட தீயணைப்பு வீரர்​களுக்கு பாம்​பு​களைப் பிடிப்​பது குறித்து பயிற்சி அளித்​து, தேவை​யான நவீன உபகரணங்​களை​யும் வழங்​கி​னார் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply