மது பாட்டிலுக்கு கூடுதல் பணம் வசூல்: டாஸ்மாக் ஊழியர்கள் 217 பேர் பணியிடை நீக்கம்

Priya
766 Views
2 Min Read

தமிழகத்​தில் டாஸ்மாக் மதுக்கடைகளில் நிர்​ண​யிக்​கப்​பட்ட விலையை விட கூடுதல் பணம் வசூலிக்​கும் ஊழியர்​கள் மீது தமிழக அரசு கடுமை​யான நடவடிக்கைகளை எடுக்​கத் தொடங்​கி​யுள்​ளது. இதன் ஒரு பகு​தி​யாக கடந்த 2 நாட்​களில் மட்​டும் 217 ஊழியர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

தமிழகத்​தில் முந்​தைய ஆட்​சிக் காலத்​தில் டாஸ்​மாக்கடைகளில் மதுபாட்டில்​களுக்கு கூடு​தலாக 10 ரூபாய் வசூலிக்​கப்பட்டு வரு​வ​தாக தவெக தலை​வர் விஜய் தனது தேர்​தல் பிரச்​சா​ரத்​தில் கடுமை​யாகச் சாடி​யிருந்​தார்.

தாங்​கள் ஆட்​சிக்கு வந்​தால் இந்த முறை​கேடு முற்​றி​லும் ஒழிக்​கப்​படும் என்று வாக்​குறுதி அளித்​திருந்​தார். அதன்​படி தவெக ஆட்​சிப்பொறுப்​பேற்ற பிறகு டாஸ்மாக் கடைகளில் கூடு​தல் வசூலைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்​கு​மாறு அதி​காரி​களுக்கு முதல்​வர் விஜய் உத்​தரவு பிறப்​பித்​தார்.

இது தொடர்​பாக மது​விலக்கு மற்​றும் ஆயத்​தீர்​வைத் துறை அமைச்சர் விக்னேஷ் ஏற்​கெனவே கடும் எச்​சரிக்கை விடுத்​திருந்தார்.

“கூடு​தல் பணம் வசூலிக்​கும் ஊழியர்​கள் முதற்​கட்​ட​மாக பணி​யிடை நீக்​கம் செய்​யப்​படு​வார்​கள். மீண்​டும் அதே தவறைச் செய்​தால் அவர்​கள் நிரந்​தர​மாகப் பணி நீக்​கம் செய்​யப்​படு​வார்​கள்” என்று அவர் திட்​ட​வட்​ட​மாகத் தெரி​வித்​திருந்​தார்.

டாஸ்​மாக் ஊழியர்​கள் கூடுதல் வரு​மானத்​துக்​காக பொது​மக்​களை சுரண்​டக் ​கூ​டாது என்​பதை கருத்​தில் கொண்​டு, அண்​மை​யில் அவர்​களுக்கு ஊதிய உயர்​வும் வழங்​கப்​பட்​டது.

புகார் சேவை மையம்

எனினும் சில இடங்களில் முறை​கேடு​கள் தொடர்ந்​தன. கூடு​தல் வசூல் தொடர்​பான புகார்​களை பொதுமக்​கள் எளி​தில் தெரிவிக்க, தமிழக அரசு அண்​மையில் பிரத்​யேகப் புகார் சேவை மையத்​தைத் தொடங்​கியது. இந்த மையத்​துக்கு வந்த ஏராள​மான புகார்​களை ஆய்வு செய்த அதி​காரி​கள், கள சோதனை​யில் ஈடு​பட்​டனர்.

இதன் அடிப்​படை​யில், நேற்று முன்​தினம் முதல்கட்​ட​மாக 67 டாஸ்​மாக் ஊழியர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டனர். அதன் தொடர்ச்​சி​யாக நேற்று மேலும் 150 ஊழியர்​கள் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளனர் கடந்த 2 நாட்​களில் மட்​டும் 217 பேர் மீதான இந்த அதிரடி நடவடிக்​கை, டாஸ்​மாக் ஊழியர்கள் மத்​தி​யில் பெரும் அதிர்ச்​சி​யை​யும் கலக்​கத்​தை​யும் ஏற்படுத்​தி​யுள்​ளது.

நடவடிக்கை தொடரும்…

அதேவேளை​யில் அரசின் இந்த அதிரடி நடவடிக்​கைக்கு மதுப்​பிரியர்​கள் மற்​றும் சமூக ஆர்​வலர்​கள் மத்​தி​யில் பலத்த வரவேற்பு கிடைத்​துள்​ளது. முறை​கேடு​களில் ஈடு​படு​படு​வோர் யாராக இருந்​தா​லும் பாரபட்​சமின்றி நடவடிக்கை தொடரும் என அரசு வட்​டாரங்​கள் தெரிவிக்​கின்​றன.

Share This Article
Leave a Comment

Leave a Reply