நில நிர்வாக ஆணையராக ராஜேஷ் லக்கானி நியமனம்

Priya
65 Views
1 Min Read

மத்​திய அரசுப் பணி​யில் இருந்து திரும்​பிய ராஜேஷ் லக்​கானி, நில நிர்​வாக ஆணை​ய​ராக நியமித்து தமிழக அரசு உத்​தர​விட்​டுள்ளது. சத்​தீஸ்​கர் மாநிலத்தை பூர்​வீக​மாகக் கொண்ட 1992-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி​யான ராஜேஷ் லக்​கானி, தமிழக அரசில் பல்​வேறு பொறுப்​புகளி​ல் பணி​யாற்​றி​னார்.

இதற்​கிடையே கடந்த 2025-ம் ஆண்டு மத்​திய அரசுப் பணிக்கு மாற்​றப்​பட்​டு, நவோதயா வித்​யாலயா சமி​தி​யின் ஆணை​ய​ராக நியமிக்​கப்​பட்டு பணி​யாற்றி வந்தார். இணைச்​செயலர் அந்​தஸ்திலான அந்த பணி​யில் அவர் ஓய்வு​பெறும் 2029-ம் ஆண்டுவரை நியமிக்​கப்​பட்​டிருந்த நிலை​யில், அவர் தற்​போது தமிழக அரசுப் பணிக்கு திரும்​பி​யுள்​ளார்.

ராஜேஷ் லக்​கானி தமிழக அரசுப்​ பணிக்கு திரும்​புவதை தொடர்ந்​து, அவருக்கு நில நிர்​வாக ஆணை​யர் பதவி அளிக்​கப்​பட்​டுள்​ளது. ஓராண்டு அல்​லது தேவைப்​படும் வரை​யில் கூடு​தல் தலை​மைச்​செயலர் அந்​தஸ்​தில் நில நிர்​வாக ஆணை​யர் பதவி தற்​காலிக​மாக உரு​வாக்​கப்​பட்டு அதில் நியமிக்​கப்​படு​வ​தாக தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தலை​மைச்​செயல​ராக உள்ள சாய்​கு​மாருக்கு அடுத்​தாண்டு பிப்​ர​வரி மாதம் வரை பணி நீட்​டிப்பு வழங்​கப்​பட்​டுள்ள நிலை​யில், ராஜேஷ் லக்​கானி​யின் வருகை முக்​கி​யத்​து​வம்​ பெற்​றுள்​ளது.

பேரிடர் மேலாண்மை ஆணையர்

இதேபோல், தமிழகத்தில் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரியாகப் பணியாற்றி வந்த ஏ.சிவஞானம், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் நியமிக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை ஆணையர் பணியிடம் ஓராண்டு காலம் அல்லது தேவைப்படும் வரை தற்காலிகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பதவி கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் பதவிக்கு இணையானது என்று தமிழக தலைமைச் செயலர் எம்.சாய்குமார் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது

Share This Article
Leave a Comment

Leave a Reply