டெல்​லி​யில் நாளை பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்​கம்: சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்கேற்​பது உறுதி

Priya
873 Views
2 Min Read

டெல்​லி​யில் நாளை பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்​டில் சீன அதிபர் ஜி ஜின்​பிங் பங்கேற்​பதை அந்​நாட்டு அரசு உறுதி செய்​துள்​ளது.

பிரிக்ஸ் கூட்​டமைப்​பில் பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென்னாப்​பிரிக்​கா, எகிப்​து, சவுதி அரேபி​யா, ஐக்​கிய அரபு அமீரகம், ஈரான், இந்​தோ​னேசி​யா, எத்​தி​யோப்​பியா ஆகிய நாடுகள் உறுப்​பினர்​களாக உள்​ளன. இந்த ஆண்டு பிரிக்ஸ் கூட்டமைப்​புக்கு இந்​தியா தலை​மையேற்று உள்​ளது. இதன்​படி செப்​டம்​பர் 12, 13-ம் தேதி​களில் டெல்​லி​யில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடை​பெற உள்​ளது.

இந்த மாநாட்​டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உட்பட பிரிக்ஸ் உறுப்பு நாடு​களின் அனைத்து தலை​வர்​களும் பங்​கேற்​கின்​றனர். ஆனால் சீன அதிபர் ஜி ஜின்​பிங் மாநாட்​டில் பங்​கேற்​பது குறித்து அந்த நாட்டு அரசு மவுனம் காத்து வந்​தது. அவர் மாநாட்​டில் பங்​கேற்​பார் என்று சீன வெளி​யுறவுத் துறை நேற்று மாலை அதி​காரப்​பூர்​வ​மாக அறி​வித்​தது.

கடந்த 2019-ம் ஆண்டு அக்​டோபரில் அதிபர் ஜி ஜின்​பிங் இந்​தி​யாவில் சுற்​றுப் பயணம் மேற்​கொண்​டார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூனில் லடாக்​கின் கல்​வான் பள்​ளத்​தாக்​கில் இந்​திய, சீன வீரர்​களிடையே மிகப்​பெரிய மோதல் ஏற்​பட்​ட​தால் இரு நாடு​களின் உறவில் விரிசல் ஏற்​பட்​டது. இந்த சூழலில் கடந்த 2024-ம் ஆண்டு ரஷ்​யா​வில் நடை​பெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பிரதமர் மோடி​யும், சீன அதிபர் ஜி ஜின்​பிங்​கும் சந்​தித்​துப் பேசினர்.

கடந்த 2025-ம் ஆண்டு ஆகஸ்​டில் சீனா​வின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்பு (எஸ்​சிஓ) உச்சி மாநாட்​டில் இரு தலை​வர்​களும் மீண்​டும் சந்​தித்​துப் பேசினர். கடந்த ஆகஸ்ட் 31, செப்​டம்​பர் 1-ம் தேதி​களில் கிர்​கிஸ்​தான் தலைநகர் பிஷ்கெக்​கில் எஸ்​சிஓ உச்சி மாநாடு நடை​பெற்​றது. இதில் இரு தலைவர்களும் கைகுலுக்கி பரஸ்​பரம் நலம் விசாரித்தனர்.

இந்த சூழலில் டெல்லி பிரிக்ஸ் உச்சி மாநாட்​டில் பங்​கேற்க 400 பேர் அடங்​கிய உயர்​நிலைக் குழு​வுடன் சீன அதிபர் ஜி ஜின்​பிங் டெல்லி வரு​கிறார். 7 ஆண்​டு​களுக்​குப் பிறகு அவர் இந்​தி​யா​வுக்கு வரு​வது மிகுந்த முக்​கி​யத்​து​வம் பெற்​றுள்​ளது. சீன அதிபர் டெல்​லி தாஜ் பேலஸ் நட்​சத்​திர ஓட்​டலிலும். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மவுரியா ஓட்​டலிலும் தங்​கு​கின்றனர். இதையொட்டி டெல்லி​யில்​ வரலாறு காணாத பாது​காப்​பு ஏற்​பாடு​கள்​ செய்யப்பட்டு உள்ளன.

Share This Article
Leave a Comment

Leave a Reply