அர்ஜெண்டினாவின் கனவை தகர்த்தார் ஃபெர்ரான் டோரஸ்; கண்ணீர் மல்க விடைபெற்றார் மெஸ்ஸி!

Priya
374 Views
8 Min Read

48 அணி​கள் பங்​கேற்ற 2026-ம் ஆண்டு பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து திரு​விழா​வின் இறு​திப் போட்டி நேற்று அமெரிக்​கா​வின் நியூ ஜெர்​சி​யில் உள்ள மெட்​லைஃப் மைதானத்தில் நடை​பெற்​றது.

உலக சாம்​பியன் பட்​டத்​தைத் தக்​க​வைத்​துக் கொள்​ளும் நோக்கில் லயோனல் மெஸ்ஸி தலை​மையி​லான அர்ஜெண்டினாவும், 2010-க்​குப் பிறகு மீண்​டும் உலகக் கோப்பையை வெல்​லும் கனவுடன் ஸ்பெ​யினும் பலப்​பரீட்சை நடத்​தின. தொடக்க விசில் ஒலித்த தருணம் முதலே ஸ்பெ​யின் தனது அடை​யாள​மான பந்​துக் கட்​டுப்​பாட்டு ஆட்​டத்தை வெளிப்படுத்​தி​யது. நடு​களத்தை முழு​மை​யாக ஆக்​கிரமித்த அந்த அணி, குறுகிய பாஸ்​கள் மற்​றும் வேக​மான நகர்​வு​கள் மூலம் அர்​ஜெண்​டினா அணி​யின் டிஃபென்ஸை தொடர்ந்து சோதித்​தது.

முதல் பாதி​யில் ஸ்பெ​யின் பலமுறை கோலுக்கு அருகே சென்​றது. லாமின் யமால், நிக்கோ வில்​லி​யம்​ஸ், பெட்ரி ஆகியோரின் வேகமான இணை ஆட்​டம் அர்​ஜெண்​டினா டிஃபென்​ஸுக்கு கடும் நெருக்​கடியை ஏற்​படுத்​தி​யது. இருப்​பினும் கோல் கீப்​பர் எமிலியானோ மார்​டினஸ் அபார​மான சேவ்​களை நிகழ்த்​தி, ஸ்பெயினின் முயற்​சிகளை ஒன்​றன்​பின் ஒன்​றாக தடுத்​தார்.

மறு​புறம் லயோனல் மெஸ்ஸி தலை​மையி​லான அர்​ஜெண்​டினா எதிர்​தாக்​குதல்​களை முன்​னெடுத்​தா​லும், இறு​திக்​கட்​டத்​தில் துல்லி​யம் இல்​லாத​தால் கோல் வாய்ப்​பு​கள் உரு​வாக​வில்​லை. முதல் பாதி ஆட்​டம் 0-0 என கோல்​களின்றி இருந்​தது. இரண்டாவது பாதி​யிலும் ஸ்பெ​யினின் ஆதிக்​கம் தொடர்ந்​தது. அர்​ஜெண்​டினா வீரர்​கள் தங்​களது பகு​தி​யில் நெருக்​க​மாக நின்று டிஃபென்ஸை பலப்​படுத்​தினர். இதனால் பலமுறை ஃபவுல்​களும் இடைநிறுத்​தங்​களும் அதி​கரித்​தன.

90 நிமிடங்​கள் முடி​வில் இரு அணி​களால் கோல் அடிக்க முடி​யவில்லை. காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 90+3-வது நிமிடத்தில் ஸ்பெ​யினின் தற்​காப்பு வீரர் பாவு குபார்​சியை பின்​னால் இருந்து தேவை​யின்றி ஃபவுல் செய்​ததற்​காக அர்​ஜெண்​டினா அணி​யின் என்ஸோ ஃபெர்​னாண்​டஸுக்கு நடு​வர் இரண்​டாவது மஞ்​சள் அட்டை காட்​டி​னார். 2-வது மஞ்​சள் அட்டை என்​பது ரெட் கார்​டுக்கு இணை​யானது என்​ப​தால் என்ஸோ ஃபெர்​னாண்​டஸ் களத்​தில் இருந்து வெளி​யேற்​றப்​பட்​டார். இதனால் அர்​ஜெண்​டினா அணி 10 வீரர்​களுடன் விளை​யாட வேண்​டிய நிலைக்கு தள்​ளப்​பட்​டது.

வழக்கமான நேரத்தில் கோல் அடிக்கப்படாததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதன் 96-வது நிமிடத்​தில் லாமின் யமால் பந்தை மிக்​கேல் மெரினோ​விடம் அனுப்ப அவர், அர்​ஜெண்​டினா வீரர் ஒட்​டமெண்​டி​யின் தடையைத் தாண்டி அடித்த ஷாட்டை கோல்​கீப்​பர் எமிலி​யானோ மார்ட்​டினெஸ் தடுத்து நிறுத்​தி​னார். அவர், மீது பட்டு திரும்​பிய பந்தை நிக்கோ வில்​லி​யம்ஸ் எளி​தாக கோல் வளைக்​குள் தள்​ளி​னார். ஆனால், ஒட்​டமெண்​டியை மிக்​கேல் மெரினோ ஃபவுல் செய்​த​தாக இந்த கோல் மறுக்​கப்​பட்​டது.

106-வது நிமிடத்​தில் உரு​வான வேக​மான தாக்​குதலில் ஸ்பெ​யின் அணி வலதுபுறத்​தில் பந்தை அழகாகக் கடத்​திவர போரோ அடித்த கிராஸை பின்​பக்​கத்​தில் இருந்த பெற்ற நிக்கோ வில்​லி​யம்ஸ் தலை​யால் முட்டி பாக்ஸ் பகு​திக்​குள் அனுப்​பி​னார். அங்கு துள்ளி வந்த பந்தை மாற்று வீர​ராக களமிறங்​கிய ஃபெர்​ரான் டோரஸ் தனது இடது காலால் கோல் வலைக்​குள் திணித்​தார்.

இதனால் ஸ்பெ​யின் அணி 1-0 என முன்​னிலை பெற்​றது. 113-வது நிமிடத்​தில் லாமின் யமாலிடம் இருந்து பந்தை பெற்ற ஃபெர்​ரான் டோரஸ் கோல் அடித்​தார். ஆனால் இது ஆஃப் சைடு என அறிவிக்​கப்​பட்​டது. ஆட்​டத்​தின் பெரும்​பகு​தி​யில் தாக்​குதலில் தடு​மாறிய அர்​ஜெண்​டி​னா, 115-வது நிமிடத்​தில்​தான் இலக்கை நோக்கி பந்தை அடித்​தது. லயோனல் மெஸ்ஸி கார்​னரில் இருந்து பாக்ஸ் பகு​திக்​குள் உதைத்த பந்து அதிர்​ஷ்ட​வச​மாக மாற்று வீர​ராகக் களம் புகுந்த ஜூலி​யானோ சிமியோனியை நோக்கி எகிறி வந்​தது. ஆனால் அவர், அதை அடித்​த​போது பந்து கோல் போஸ்ட்​டின் மேலாக உயரே பறந்து சென்​றது.

120+1-வது நிமிடத்​தி​லும் அர்​ஜெண்​டினா அணி​யின் கோல் அடிக்​கும் வாய்ப்​புக்கு பலன் கிடைக்​க​வில்​லை. முடி​வில் ஸ்பெ​யின் அணி 1-0 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று சாம்​பியன் பட்​டம் வென்​றது. அந்த அணி 16 வருடங்​களுக்கு பிறகு தற்​போது 2-வது முறை​யாக வாகை சூடியுள்​ளது. கடந்​த 2010-ம்​ ஆண்​டும்​ ஸ்​பெ​யின்​ அணி கோப்​பையை வென்​றிருந்​தது.

தொடர்​ச்சியாக 2-வது உலகக்​ கோப்​பையை வெல்​லும்​ கனவுடன்​ இருந்​த லயோனல்​ மெஸ்​ஸி தலை​மையி​லான அர்​ஜெண்​டி​னா அணியினர் கண்ணீர் மல்க மைதானத்தில் இருந்து வெளியேறினர். உலகக் கோப்பை தொடரில் கடந்த 12 ஆட்டங்களில் லயோனல் மெஸ்ஸி கோல் அடிக்காமலோ அல்லது கோல் அடிக்க உதவி செய்யாமலோ இருந்தது இதுவே முதன்முறையாகும். சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு சுமார் ரூ.428 கோடிபரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த அர்ஜெண்டினா அணி சுமார் ரூ.325 கோடியை பரிசாக பெற்றது.

‘நான் மட்​டும் அடிக்​க​வில்​லை’

அர்​ஜெண்​டினா அணிக்கு எதி​ரான இறு​திப் போட்​டி​யில் ஃபெர்​ரான் டோரஸ் அடித்த கோல் காரண​மாக ஸ்பெ​யின் அணி சாம்​பியன் பட்​டம் வென்​றது. இந்த உலகக் கோப்​பைத் தொடரில் அவர், அடித்த முதல் கோலே அவரது வாழ்​நாளின் மிகச் சிறந்த கோலாக அமைந்து ஸ்பெ​யின் அணிக்கு கோப்​பையை பெற்​றுக்​கொடுத்​துள்​ளது. ஃபெர்​ரான் டோரஸ் கூறும்​போது,” இந்த கோலை நான் மட்​டும் அடிக்​க​வில்​லை, ஸ்பெ​யினின் 4.7 கோடி மக்​களும் சேர்ந்​து​தான் அடித்​தோம்” என்​றார்.

கோல் வாங்​காமல் சாதனை

உலகக் கோப்பை தொடரில் 2-வது முறை​யாக சாம்​பியன் பட்​டம் வென்று ஸ்பெ​யின் அணி அசத்தி உள்​ளது. நடப்பு உலகக் கோப்​பைத் தொடரில் அந்த அணி 8 போட்​டிகளில் ஒரே ஒரு கோலை மட்​டுமே எதிரணி அடிக்க அனு​ம​தித்​தது. இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்​றிலேயே சாம்​பியன் பட்​டம் வென்ற அணி ஒன்று மிகக் குறைந்த கோல்​களை மட்​டுமே வாங்​கிய புதிய சாதனையைப் படைத்​துள்​ளது ஸ்பெ​யின் அணி.

65 வயதில் சாதனை

உலகக் கோப்பை இறு​திப் போட்​டி​யில் ஸ்பெ​யின் அணி 1-0 என்ற கோல் கணக்​கில் அர்​ஜெண்​டி​னாவை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது. சாம்​பியன் பட்​டம் வென்ற ஸ்பெ​யின் அணிக்கு 65 வயதான லூயிஸ் டி லா ஃபியூண்டே பயிற்​சி​யாள​ராக செயல்​பட்​டிருந்​தார். இதன் மூலம் ஒரு அணியை உலகக் கோப்பை சாம்​பியன் பட்​டத்​துக்கு வழிநடத்​திய அதிக வயதுடைய பயிற்​சி​யாளர் என்ற வரலாற்​றைப் படைத்​துள்​ளார் ஃபியூண்​டே.

38-ல் தோல்வி இல்லை

உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் சாம்​பியன் பட்​டம் வென்​றுள்ள ஸ்பெ​யின் அணி கடைசி​யாக விளை​யாடிய 38 போட்​டிகளில் (29 வெற்​றிகள், 9 டிராக்​கள்) தோல்வியே சந்​திக்​காமல் வெற்​றிநடை போட்டு வரு​கிறது. இதன் மூலம் எந்​தவொரு ஐரோப்​பிய ஆடவர் அணி​யும் செய்​யாத மிக நீண்ட தொடர் தோல்​வியற்ற சாதனையைத் தனதாக்​கி​யுள்​ளது.

இதற்கு முன், இத்​தாலி அணி 2018-ம் ஆண்டு அக்​டோபர் முதல் 2021-ம் ஆண்டு செப்​டம்​பர் வரை தொடர்ச்​சி​யாக 37 போட்​டிகளில் (28 வெற்​றிகள், 9 டிராக்​கள்) தோல்​வியடை​யாமல் இருந்​ததே சாதனை​யாக இருந்​தது. இத்​தாலி அணி​யின் அந்த சாதனைப் பயணத்தை முடிவுக்​குக் கொண்​டு​வந்து புதிய சாதனையை படைத்​துள்​ளது ஸ்பெ​யின் அணி.

மெஸ்​ஸி​யாலும் முடிய​ல…

கடந்த இரண்டு ஆண்​டு​களுக்​கும் மேலாக, ஸ்பெ​யின் அணியை யாராலும் வீழ்த்த முடிய​வில்​லை. தற்​போது அர்​ஜெண்​டினா அணி​யின் நட்​சத்​திரம் லயோனல் மெஸ்​ஸி​யால் கூட முடி​யாமல் போனது. உலகக் கோப்பை தொடர் முழு​வதும் ஆட்​டத்​தின் கடைசி தருணங்​களில் எதிர்​பா​ராத திருப்​பங்​களை ஏற்​படுத்தி வெற்றி பெறு​வ​தில் மன்​னர்​களாகத் திகழ்ந்த அர்​ஜெண்​டினா அணி​யால் ஆட்​டத்​தின் எந்த ஒரு பகு​தி​யிலும் ஸ்பெ​யின் அணிக்கு அழுத்​தம் கொடுக்க முடி​யாமல் போனது துரதிருஷ்டமே.

‘கோல்​டன் பூட்’

உலகக் கோப்பை கால்​பந்து தொடரில் அதிக கோல்​கள் அடித்த வீரர்​களுக்கு வழங்​கப்​படும் ‘கோல்​டன் பூட்’ விருதை பிரான்ஸ் அணி​யின் கேப்​டன் கிலியன் எம்​பாப்பே பெற்​றார். அவர், மொத்​தம் 10 கோல்​களை பதிவு செய்​தார். மேலும் 4 முறை கோல் அடிக்க சக அணி வீரர்​களுக்கு உதவி​யும் செய்​திருந்​தார்.

கோல்​டன் பூட் விருதை கிலியன் எம்​பாப்பே தொடர்ச்​சி​யாக 2-வது முறை​யாக வென்​றுள்​ளார். கடந்த 2022-ம் ஆண்டு தொடரிலும் அவர், கோல்​டன் பூட் விருதை வென்​றிருந்​தார்.அர்​ஜெண்​டி​னா​வின் லயோனல் மெஸ்ஸி 8 கோல்​களும், இங்​கிலாந்​தின் ஜூட் பெல்​லிங்​ஹாம், நார்வே அணி​யின் எர்​லிங் ஹாலண்ட் ஆகியோர் தலா 7 கோல்​களும் பதிவு செய்து அடுத்​தடுத்த இடங்​களை பிடித்தனர்.

‘கோல்​டன் பால்’

ஸ்பெ​யின் அணி​யின் கேப்​டன் ரோட்​ரி, தொடரின் சிறந்த வீரருக்​கான ‘கோல்​டன் பால்’ விருதை வென்​றார். அவர், இந்​தத் தொடரில் மொத்​தம் 799 பாஸ்​களை மேற்​கொண்​டிருந்​தார். இந்த பிரி​வில் 2-வது இடத்தை ஸ்பெ​யினை சேர்ந்த பவ் குபெர்​சி​யும் (690), 3-வது இடத்தை ஐமெரிக் லபோர்ட்​டும் (660) பிடித்​தனர்.

‘கோல்​டன் கையுறை’

ஸ்பெ​யின் அணி​யின் கோல் கீப்​பர் உனாய் சிமோன் கோல்​டன் கையுறை விருதை வென்​றார். அவர், இந்த தொடரில் 8 ஆட்​டங்​களில் ஒரே ஒரு கோல் மட்​டுமே விட்​டுக் கொடுத்​திருந்​தார். சிறந்த இளம் வீரருக்​கான விருதை ஸ்பெ​யின் அணி​யின் 19 வயதாகும்​ பவ்​ குபெர்​சி வென்​றார்.

11 முறை தடுத்து சாதனை

இறு​திப் போட்​டி​யில் ஸ்பெ​யின் அணி தொடர்ச்​சி​யாக இலக்கை நோக்கி அடித்த 20 ஷாட்​களுக்​குப் பிறகே, அர்​ஜெண்​டினா அணி​யால் அது​வும் 115-வது நிமிடத்​தில்​தான் இலக்கை நோக்கி தனது முதல் ஷாட்டை அடிக்க முடிந்​தது. ஸ்பெ​யின் அணி ஆட்​டத்​தின் முதல் 10 கார்​னர் கிக்​கு​களில் 9-ல் ஆதிக்​கம் செலுத்​தி​யது.

இருப்​பினும், அர்​ஜெண்​டி​னா​வின் கோல்​கீப்​பர் எமிலி​யானோ மார்ட்​டினெஸ் உலகக் கோப்பை இறு​திப் போட்டி வரலாற்றிலேயே சாதனையாக 11 முறை ஸ்பெ​யின் அணி​யின் கோல் அடிக்​கும் முயற்​சிகளை தகர்த்​தெறிந்​தார்.

308 கோல்​கள்

2026-ம் ஆண்டு உலகக் கோப்பை கால்​பந்து அமெரிக்​கா, மெக்​சிகோ, கனடா ஆகிய 3 நாடு​கள் இணைந்து நடத்​தின இந்த தொடரில் 48 அணி​கள் கலந்து கொண்டு விளை​யாடின. மொத்தம் நடைபெற்ற 104 போட்டிகளில் ஒரு போட்​டிக்கு சராசரி​யாக 3 கோல்​கள் வீதம், 308 கோல்​கள் அடிக்​கப்​பட்டு புதிய சாதனை படைக்​கப்​பட்​டுள்​ளது. 2022-ம் ஆண்டு கத்​தார் உலகக் கோப்​பை​யில் 64 போட்​டிகளில் 172 கோல்​கள் அடிக்​கப்​பட்​டிருந்​தன.

ஸ்பெயினின் தந்திரம்

உலகக் கோப்பை தொடரில் ஸ்பெயின் அணியின் அணுகுமுறை முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. பந்தின் கட்டுப்பாட்டை முழுமையாக தங்கள் வசம் வைத்துக்கொண்டு, எதிரணிக்கு சிறிய வாய்ப்புகூட வழங்காத ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்கம் முதல் இறுதி வரை அதே தந்திரத்தை சிறப்பாக செயல்படுத்திய ஸ்பெயின், உலக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply