பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற ஜெஹான், சஹானா ரவிக்கு தலா ரூ.30 லட்சம் ஊக்கத்தொகை

Priya
768 Views
1 Min Read

ஜப்​பானில் நடை​பெற்று வரும் பாரா ஆசிய விளை​யாட்​டுப் போட்​டிகளில் பதக்​கம் வென்ற தமிழக வீரர் ஜெஹான் டொரப் மதன் மற்​றும் வீராங்​கனை பேபி சஹானா ரவி ஆகியோ​ருக்கு தலா ரூ.30 லட்​சம் ஊக்​கத்​தொகை வழங்​கப்​படும் என முதல்​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

இது​குறித்து அவர் வெளி​யிட்ட சமூக வலை​தளப் பதி​வில் கூறி​யிருப்​ப​தாவது: ஜப்​பானில் நடை​பெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளை​யாட்டுப் போட்​டிகளில் டேபிள் டென்​னிஸ் ஆண்​கள் ஒற்​றையர் கிளாஸ் 1 பிரி​வில் ஜெஹான் டொரப் மதன் மற்​றும் பெண்​கள் கிளாஸ் 9 பிரி​வில் பேபி சஹானா ரவி ஆகியோர் வெண்​கலப் பதக்​கங்​களை வென்று தமிழகத்​துக்​கும், இந்​தி​யா​வுக்​கும் பெருமை சேர்த்​துள்​ளனர்.

அவர்​களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகள் மற்​றும் பாராட்​டுகள். இவர்​களது சாதனையை அங்​கீகரிக்​கும் வகை​யில், தமிழக அரசு சார்​பில் தலா ரூ.30 லட்​சம் உயரிய ஊக்​கத்​தொகை இரு​வருக்​கும் வழங்​கப்​படும்.

தமிழகத்​தைச் சேர்ந்த இளம் பாரா விளை​யாட்டு வீரர், வீராங்​க​னைகளுக்கு ஊக்​கத்​தையும், உத்​வேகத்​தையும் அளிக்​கும் வகை​யில் இவர்​களின் வெற்றி அமைந்​துள்​ளது.

உலக ஸ்​கேட்​டிங் போட்​டி

இதேபோல், பாராகுவே நாட்​டின் அசுன்​சி​யோன் நகரில் நடை​பெற்ற உலக ஸ்​கேட்​டிங் போட்​டிகள் 2026 தொடரின் மாரத்​தான் பிரி​வில் தங்​கப்​ப​தக்​கம் வென்று சாதனை படைத்த தமிழக ஸ்கேட்​டிங் வீரர் ஆனந்த்​குமாருக்​கும், ஜூனியர் பெண்​களுக்​கான 3000 மீட்​டர் தொடர் ஓட்​டப் போட்​டி​யில் வெண்​கலப் பதக்​கம் வென்ற தமிழக வீராங்​க​னைகள் லட்​சிதா, பிரகதி மற்​றும் ருத்வ ஆகியோ​ருக்​கும் எனது வாழ்த்​துகள்.

ஆனந்த்​குமார் இந்த தொடரில் ஏற்​கெனவே 500 மீட்​டரில் வெண்​கலமும், 1000 மீட்​டரில் வெள்​ளி​யும் வென்​றுள்ள நிலை​யில், தற்​போது மூன்​றாவ​தாக தங்​கப் பதக்​கத்​தையும் கைப்​பற்றி அசத்​தி​யுள்​ளார்.

இச்​சாதனைகள் விளை​யாட்​டுத் துறை​யில் சாதனை படைக்​கத் துடிக்​கும் இளைய தலைமுறை​யினருக்கு புதிய ஊக்​கத்​தையும், உத்​வேகத்​தையும் அளிக்​கும். பதக்​கங்​களை வென்ற வீரர், வீராங்​க​னைகள் மேலும் பல உயரங்​களை எட்ட வாழ்த்து​கிறேன். இவ்​வாறு அதில் தெரி​வித்​துள்​ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply